முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வருமான வரி உச்சவரம்பு உயர்வு! வரி விகிதம் குறைப்பு!
தனி நபர் வருமானத்தின் மீதான வரி உச்சவரம்பை ரூ.1,10,000ல் இருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதென நிதியமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார்!

நாடாளுமன்ற மக்களவையில் 2008-09 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ப. சிதம்பரம், பெண்களுக்கான தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.1,50,000ல் இருந்து ரூ.1,80,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கான தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, ரூ.2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1,50,000ல் இருந்து ரூ.3 லட்சம் வரை வருமான வரி 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை வருமான வரி 20 விழுக்காடு ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும் என்று சிதம்பரம் அறிவித்தார்.
மேலும்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.60,000 கோடி ஒதுக்கீடு!
நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
தங்கநாற்கர சாலை திட்டம் 96 ‌விழு‌க்காடு நிறைவு!
பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி!
உணவு அ‌ல்லாத ப‌யி‌ர்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு!
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை!