2008-09ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரத்திற்கு உடல் நலக் காப்பீடு.
இரண்டாம் நிலை 3ஆம் நிலை மற்றும் கிராமப் புறங்களில் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 வருட வரி விலக்கு.
கலாச்சார சுற்றுலா மேம்பாட்டிற்காக கலாச்சார சுற்றுலாவை நடத்துபவர்களுக்கு 5 ஆண்டு வரி விலக்கு
விளையாட்டு மற்றும் விருந்தினர் மாளிகைகளில் நவீன வசதிகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் வரியில் இருந்து விலக்கு.
பங்குப் பத்திரம் மீது விதிக்கப்படும் வரியை செலவினக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
பங்குப் பரிவர்த்தனை மீது விதிக்கப்படும் வரி போன்று முன்பேர சந்தைக்கும் வரி.
மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைப்பு
வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வதன் மீது விதிக்கப்பட்ட வரி ரத்து.
பங்குப் பரிமாற்றத்தின் மீதான வரி தொடரும்.
குறுகிய கால மூலதனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் மீதான வரி 15 விழுக்காடாக உயர்வு
நிறுவன வருமான வரியில் மாற்றமில்லை.
நிறுவன வருமான வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியிலும் மாற்றமில்லை.
சிறிய கார்களின் மீதான உற்பத்தி வரி 14ல் இருந்து 12 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர்ரக கார்களின் மீதான உற்பத்தி வரி 14 விழுக்காடாக குறைப்பு.
தனி நபர் வருமான வரி உச்சவரம்பு 1,10,000ல் இருந்து 1,50,000 ஆக உயர்த்தப்படுவதால் அந்த வரி செலுத்துபவர் அனைவருக்கும் ரூ.4000 வரி குறைப்பு பெறுவார்கள்.
மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு 2,25,000 ஆக உயர்வு.
மத்திய உற்பத்தி வரி அதிகப்பட்ச வரம்பு 16 விழுக்காட்டில் இருந்து 14 விழுக்காடாக குறைப்பு.
உற்பத்தித் துறையை ஊக்குவிக்க இந்த குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மீதான இறக்குமதி தீர்வை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைப்பு
சிறிய கார்கள் மீதான உற்பத்தி வரி குறைப்பு
தனிநபர் வருமான விரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்வு
ரூ.1,50,000 மேல் 3,00,000 வரை 10 விழுக்காடு வருமான வரி.
பெண்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.1,80,000 ஆக உயர்வு.
3,00,000த்திற்கு மேல் 5,00,000 வரை 20 விழுக்காடு வருமான வரி.
5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி.
சுங்க தீர்வை அதிகபட்ச வரம்பில் மாற்றம் ஏதுமில்லை.
செட் டாப் பாக்ஸ்களுக்கு சுங்கத் தீர்வை கிடையாது.
எரிசக்தி திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், பழைய இரும்பு, உருக்கு போன்றவைகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு.
சில விளையாட்டு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு
நாஃப்தா மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு
வரி விதிப்புகளை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னால் அது வரி கட்டுவோருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார் நிதியமைச்சர் சிதம்பரம்.
பட்ஜெட் நிதி பற்றாக்குறை 3.1 விழுக்காடாக உள்ளது. இதனை 2.5 விழுக்காடாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை 1.4 விழுக்காடாக உள்ளது.
|