முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உயர் வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் – ஆய்வறிக்கை!
இந்தியாவின் பொருளாதாரம் உயர் வளர்ச்சிப் பாதையில் திடமாக சென்றுக்கொண்டிருக்கிறது என்று மத்திய அரசின் பொருளாதார அறிக்கை கூறுகிறது.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் இன்று 2007-08 நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

2007-08 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் பொருளாதார வள‌ர்‌‌ச்‌சி 8.7 ‌விழு‌க்காடாக இரு‌ந்தது என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

பொருளாதார அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு :

ஒ‌ட்டுமொ‌த்த பண‌வீ‌க்க ‌வி‌கித‌ம் கட‌ந்த 2006-07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் இரு‌ந்த 5.6 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 2007-08 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் 4.1 ‌விழு‌க்காடாக குறை‌ந்து‌ள்ளது.

உ‌ள்நா‌ட்டு முத‌லீடு ம‌ற்று‌ம் சே‌மி‌ப்‌பி‌ல் ஒரு‌ங்‌கிணை‌ந்த வள‌ர்‌ச்‌சி காண‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அர‌சி‌ன் வருவா‌ய் வள‌ர்‌ச்‌சி க‌ணிசமாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

முத‌லீ‌ட்டு‌க்கான சூழ‌ல் ந‌ம்‌பி‌க்கைய‌ளி‌ப்பதாக இரு‌ந்தது.

உ‌ள்க‌ட்டமை‌ப்பு ம‌ற்று‌ம் நுக‌ர்வோ‌ர் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட தொ‌ழி‌ல் துறை‌யி‌ல் தே‌க்க‌நிலை காண‌ப்ப‌ட்டது.

நட‌ப்பு ‌நி‌தியா‌ண்டி‌ல் இ‌ந்‌திய பொருளாதார‌ம் ச‌‌ந்தை ப‌ரிவ‌ர்‌த்தனை ‌வி‌கிதா‌ச்சார‌ப்படி ரூ. 40 ல‌ட்ச‌ம் கோடியை‌த் (1 டி‌ரி‌ல்‌லிய‌ன் டால‌ர்) தா‌ண்டியது.

சேவை‌த் துறை வள‌ர்‌ச்‌சி பரவலான அள‌வி‌ல் இரு‌ந்தது. அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக ப‌த்தாவது ‌தி‌ட்ட‌க் கால‌த்‌தி‌ல் போ‌க்குவர‌த்து ம‌ற்று‌ம் தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற‌த் துறை வள‌ர்‌ச்‌சி ‌மிகவு‌ம் அ‌திகமாக இரு‌ந்தது.

2006-07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் ‌நி‌தி‌ச்சேவை வள‌ர்‌ச்‌சி 13.9 ‌விழு‌க்காடாக இரு‌ந்தது.
1 | 2  >>  
மேலும்
ரயில்வே பட்ஜெட்: ஒரிசா ரயில் சேவை பாதிப்பு!
ரயில்வே பட்ஜெட்: வடகிழக்கு புறக்கணிப்பு!
தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் - உற்பத்தி வரி குறைக்கப்படலாம்?
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சலுகைகள் தொடருமா?
ரயில்வே பட்ஜெட் - தொழில் துறை வரவேற்பு!