2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொழில் வணிகத் துறைகளில் நடந்த மிக முக்கியமான தகவல்கள், நிகழ்வுகளின் தொகுப்பு.
ஜனவரி 02: இந்திய உருக்கு ஆணையம் (செயில்) சேலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி.
ஜனவரி 03: புதுவையில் வாட் வரி திருத்த மசோதா நிறைவேற்றம்.
ஜனவரி 04: மக்காச் சோளம் ஏற்றுமதிக்கு தடை- கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை.
ஜனவரி 10: உலகத்திலேயே விலை குறைந்த காரான நானோ ரக காரை டாடா மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.1 லட்சம் என அறிவித்தது.
ஜனவரி 10: இதுவரை இல்லாத அளவிற்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 21,206.77 புள்ளிகளை தொட்டது.
ஜனவரி 11: மகாராஷ்டிராவில் நுழைவு வரி நீக்கம்.
ஜனவரி 12: கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.3,660 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
ஜனவரி 14: பாரத ஸ்டேட் வங்கி உரிமை பங்கு வெளியிட முடிவு.
ஜனவரி 16: ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குகளை வெளியிட உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
ஜனவரி 21: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17,605.35 புள்ளியாகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,208.80 புள்ளியாக குறைந்தது.
பிப்ரவரி19: ஊரக மின்கட்டுமான கழகம் (Rural Electrification Corporation) பொது பங்குகளை வெளியிட்டது.
பிப்ரவரி20: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், உகான்டா நாட்டைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனத்தை வாங்கியது.
பிப்ரவரி23: அயல்நாடு வாழ் இந்தியரான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, உலகின் சிறந்த 10 பெண் தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவர் என்று பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்தது.
பிப்ரவரி26: மக்களவையில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ஐந்தாவது முறையாக ரயில்வே நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 29 மக்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
மார்ச் 02: ரிச்சர்ட் பிராண்ட்சன் வர்ஜின் மொபைல் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது.
மார்ச் 09: டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் டி.வி.எஸ் கிங் ஆட்டோ அறிமுகம்.
மார்ச் 17: சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
மார்ச் 21: உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த, சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு.
மார்ச் 22: பாமாயில் இறக்குமதி வரி குறைப்பை திரும்ப பெற வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தம் கூறினார்.
மார்ச் 25: பங்கு பரிவர்த்தனை முத்திரை கட்டணம் குறைக்க டில்லி மாநில அரசு முடிவு.
மார்ச் 26: மாருதி சுஜூகி நிறுவனம் சுவிஃப்ட் டிஜியர் ரக காரை அறிமுகப்படுத்தியது.
மார்ச் 27: மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு வழங்குவதாக கேரளா முடிவு அறிவித்தது.
மார்ச் 28:உருக்கு, சிமெண்ட், பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதி வரிச் சலுகை ரத்து.
மார்ச் 31: இந்தியாவின் அந்நிய நாட்டு கடன் 201 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஏப்ரல் 01: இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பது பற்றியும், பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) எச்சரித்தது.
ஏப்ரல் 01: சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
|