முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > 2008 ஒரு பா‌ர்வை > அசோகன்-புஷ்பாஞ்சலி இதயம் வேண்டும்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அசோகன்-புஷ்பாஞ்சலி இதயம் வேண்டும்!
நடந்தவை, நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி - புதுமொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால், முடிந்து போனவற்றை எண்ணி வீணே வாளாதிருக்காமால், அடுத்து வரும் புத்தாண்டில் 2009இல், சாதனையை நோக்கி நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், கடந்த ஆண்டில் நிகழ்ந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, புதிய சகாப்தத்தை படைக்க வேண்டும் என்ற தீரத்துடன் உறுதி ஏற்பதே இந்நாளின் செய்தியாகும்.

அந்த வகையில் கடந்த ஆண்டின் (2008) ஒரு உணர்வுப்பூர்வ நிகழ்வினை மறுநினைவூட்ட விரும்பியதன் அடிப்படையிலேயே இக்கட்டுரை.

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலியை தமிழநாட்டு மக்கள், ஏன் மருத்துவ உலகமே அவ்வளவு எளிதில் மறந்து விட்டிருக்க முடியாது.

இந்த தம்பதியரின் 11ஆம் வகுப்புப் படித்து வந்த மகன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் சிக்கி, அவனது மூளை செயல் இழந்து விட்ட தகவலைக் கேட்டு, இடி விழுந்த மனதோடும், இதயம் கலங்காத பெற்றோராக உறுதிபூண்டதை அனைவரும் அறிவர்.

தங்கள் மகன் ஹிதேந்திரனின் இதயம் உள்ளிட்ட உறுப்புகள் வேறு சில மனிதர்களின் முகங்களுடன் வாழ வேண்டும் என்றெண்ணிய அசோகன்-புஷ்பாஷ்சலி தம்பதி, அனைத்து உறுப்புகளையும் தானம் செய்ததை இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சொல்லி சொல்லிப் பாராட்டலாம்.

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, ஜெ.ஜெ. நகர் முகப்பேரில் உள்ள டாக்டர் கே.எம். செரியன் இருதய மருத்துவமனைக்கு துடிக்கும் இதயத்தை, துணிவுடன் கொண்டு செல்ல உதவிய காவல்துறை உதவி ஆணையர் மனோகரன் மற்றும் காவலர் மோகனின் தன்னலமற்ற சேவையையும் இந்த நேரத்தில் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

webdunia photoWD
செரியன் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மது சங்கர் தலைமையிலான குழு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தி சாதனை படைத்தனர்.

இந்தியாவிலேயே இதுபோன்ற அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது இரண்டாவது முறை என்பதொடு, சென்னையில் அதுவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதயத்தை குளிரூட்டப்பட்ட நிலையில் கொண்டு சென்று பொருத்தியிருப்பது இதுவே முதல்முறை என்பது மருத்துவ உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை எனலாம்.

வெறும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதோடு, போக்குவரத்தையும் சீர்செய்வது மட்டுமே காவல்துறையினரின் பணி என்ற நிலையோடு நிற்காமல், காவல்துறையினருக்குள்ளும் சேவை மனப்பான்மையுடன் கூடிய இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை பறைசாற்ற இந்த சம்பவத்தை விடவும் சான்று வேண்டுமோ?

1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
த‌மிழக‌ம் ஒரு பா‌ர்வை
2008‌ல் உலக‌ம்