FREE

On the App Store

FREE

On the App Store

விநாயகர் சதுர்த்தி புராணம்

ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (12:46 IST)

Widgets Magazine

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினம்.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

வெப்துனியா சிறப்பு

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 3

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று பாலகங்காதர திலகர் முழங்கியதற்குப் பின்னரே இந்திய ...

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 2

பிரிட்டிஷ் படையில் விசுவாசமிக்க வீரர்களாக பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் ...

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைந்துவிட்ட இந்நாளில், 200 ஆண்டுக்காலம் நமது நாட்டை ...

சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள்!

சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தது ஆண்கள் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கான ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

உருளைக் கிழங்கின் மகத்துவம்

உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்க

தற்போதுள்ள உலக சூழலில் அதிக உடல் எடை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில்

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

'காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்'

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 ...

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

எங்கள் மகன் விரைவில் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்: ஐ.எஸ். தீவிரவாதியின் பெற்றோர்

ஐ.எஸ். தீவிரவாதி முகமது எம்வாசியின் பெற்றோர் "நாங்கள் அவனை வெறுக்கிறோம். அவன் நரகத்திற்குதான் ...

தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் - ராம.கோபாலன்

மகாராஷ்டிர மாநிலத்தைப் போல தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி ...

ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை

உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் ...

அண்ணா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சமூக ஆர்வலர் அண்ணா ...

Widgets Magazine