முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > விநாயகர் சதுர்த்தி
 
அயல் நாடுகளில் ஆனைமுகத்தான்!
Webdunia
உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறார் நம் நாட்டுப் பிள்ளையார் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது. உலகத்துக்குப் பதில் அம்மை அப்பனை சுற்றிய ஆனை முகத்தானுக்கு உலகம் முழுதும் வழிபாடுகளும், விழாக்களும், கோயில்களும் உகந்தது அல்லவா? சீனா, ஜப்பானில் ஆரம்பித்து எங்கெல்லாம் உலகம் சுற்றியிருக்கிறார் என்று பார்க்கலாமா?

சீனாவில

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது என்கிறது வரலாறு. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான் புத்தர் சிலையை சீனாவிற்குக் கொண்டு சென்றவர் என்றும் கூறுவார்கள். எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது. மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது. துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோயில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

ஜப்பானில

சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம். கோல்சோடைஷி என்பவர் கொண்டு

போனதாய் கூறுகிறார்கள். கான்கிட்டன் ஹாயக்ஷh என்று வினாயகருக்கு ஜப்பானில் பெயர்கள் உள்ளன. யோகநிலையில் விநாயகர் டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள வினாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.

தாய்லாந்த

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார். நான்முக வினாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

கம்போடியாவில

கம்போடியாவில் சோக்குஸ்(சந்தனகிரி) விநாயகர் மூன்று கண்கள், பூணூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன் பிராசுஷேஸ் என்னும் பெயரில் இருக்கிறார்.விநாயகர் சிலையில் தந்தமும் சுவடியும் இருந்தால் வித்யபிரதாதா என்று பெயர்.

எகிப்த

எகிப்து நாட்டில் விநாயகர் கையில் சாவி இருக்கிறது. ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது .

கிரேக்கம

கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலிய

உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோயிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோயிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோயிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு வினயாகர் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன .

விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேசின் என்னும் மெல்போர்ன் புறநகர்ப் பகுதியில் நகர் மையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் கிழக்கில் தென் இந்திய மரபில் அருள்மிகு வக்ரதுண்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா அரசு 1987ல் உருவான இந்துச்சங்கத்திற்கு நிலத்தை குத்தகைக்கு இனாமாக வழங்கிய இடத்தில் மாமல்லபுரத்திலிருந்து 1993ல் மூன்று சிற்பிகளை வரவழைத்து இக்கோயிலை அமைத்துள்ளனர்.

அடிலாய்ட் நகரில் 1985ல் இந்துசங்கம் நிறுவி வழிபாடு கைவிடப்பட்ட பழைய கிறிஸ்துவ திருச்சபை தேவாலயம் இருந்த இடத்தில் விநாயகரின் ஆலயம் எழுப்பி உள்ளனர். 1986ல் விநாயகருக்கு மட்டுமே முதலில் உருவான இக்கோயில் அப்போதைய ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கோயிலாகும்.
  1 | 2 | 3  >> 
மேலும்
விநாயகர் சதுர்த்தி புராணம்