நமது வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார். எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம். நாம் பயன்படுத்தும் கருவிகளை தூய்மை படுத்தி ஆயுத பூசை கொண்டாடுகிறோம். இதுவே நவராத்திரி, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை ஆகிய பண்டிகைகளின் ஆன்மீக அடிப்படையாகும். |