முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > பொ‌ங்க‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கொங்குநாட்டு பொங்கல்!
-சத்தீஷ் குமார்
pongal
webdunia photoWD
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களது பாரம்பரியம், கலாச்சாரத்தின் அடிப்படையில் பண்டிகைகள் உள்ளன. அதில் உலகமே வியக்கும் இந்திய மக்களின் கலாச்சாரத்தில் தான் எத்தனை பண்டிகைகள், விஷேசங்கள். ஒவ்வொரு மதம், ஜாதிக்கும் பிரத்யேகமாக பண்டிகைகள் இருந்தாலும், இந்த வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.

இதில் தமிழர் திருநாளான தைத்திருநாள் குறிப்பிடத்தக்கது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கூற்றின் அடிப்படையில் தைத்திருநாளை வரவேற்க, மார்கழி இறுதி நாளன்று பழைய, தேவையில்லாத பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவர்.

தை மாதத்தின் முதல் நாள் பொங்கலாகவும், மறுநாள் மாட்டுப் பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாட்டம் தொடர்ந்து நான்கு நாட்கள் நீடிக்கிறது. ஆனால், இன்றைய நவீன காலத்தில் பொருளாதாரத்தை மையமாக வைத்தபெரும்பாலானோர் வாழ்வதால் தங்களது பாரம்பரியங்களை மறந்தவர்களாக காணப்படுகின்றனர்.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இன்றும் கொஞ்ச, நஞ்சம் காக்கப்படுகிறது என்றால், அதற்கான பெருமை கிராமங்களையே சாரும். அதிலும் குறிப்பாக எங்கும் பசுமை எழில் கொஞ்சும் கொங்கு நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு தனி மதிப்பு உண்டு.

தாராபுரம், பழனி, சேலம், தர்மபுரி, ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளாப்பட்ட போதும சரி, முஸ்லீம் மன்னர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்களால் ஆளாப்பட்ட போதும் சரி தமிழ் கலாச்சாரம் மங்கியதில்லை.

தற்போதைய நகரமயமாதல், நாகரிக மாற்றம் என்ற போர்வையில் கொங்கு மண்டலத்திலும் கிராமங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக அப்பகுதி விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாக மாறிவருகின்றன.

இந்த மாற்றம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிற போதிலும், கொஞ்சு தமிழ் கொங்கு நாடு இன்றளவும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  1 | 2  >> 
மேலும்
பொங்கப்படி
பொ‌ங்கலு‌ம் ஒடை‌ஞ்ச பானையு‌ம்...
மாற்றம்! (சிறுகதை)
விரைவில் தமிழருடைய புத்தாண்டாக தை முதல் நாள்: கருணாநிதி!
தடையை மீறி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு குழு அறிவிப்பு!
மஞ்சளின் மகத்துவம்!