முதல் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷாரை நடுங்கச் செய்த ஒரு சொல் என்றால், அது எம்டன்தான். கப்பற்படைப் போரில் தங்களை எவராலும் வெல்ல முடியாது என்ற கொட்டத்தை அடக்கிய ஜெர்மெனியின் போர்க் கப்பலே எம்டன். கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுமழைப் பொழிந்துவிட்டு, கண்ணெட்டா தூரத்தில் சென்று மறையும் இந்நீர்மூழ்கிக் கப்பல், சீன கடற்பகுதி வழியாக இந்தியக் கடல் எல்லையில் நுழைந்து 1914-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று பிரிட்டிஷ் பிடியில்...