முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > 2008 பு‌‌த்தா‌ண்டு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மானுட ஒற்றுமையை நோக்கி சிறக்கட்டும் சிந்தனை!
aurobindo
webdunia photoWD
மானுட ஒற்றுமை என்பதே இயற்கையின் இறுதித் திட்டத்தின் நிச்சயமான ஒரு அங்கமாகும், அது நடந்தே ஆகவேண்டும். மானுட இனத்தின் வேரான அதன் உயிர்த்துடிப்பினையும், செழுமைமிக்க வேறுபாடுகளைக் கொண்ட அதன் ஒற்றுமையையும் பாதுகாத்து, அதற்குறிய சூழலில் அது நிறைவேறியே தீரும்.
ஸ்ரீ அரவிந்தர்.

எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் தங்களது தனி மனித, சமூக, உலக வாழ்க்கையில் கடந்த ஓராண்டில் சந்தித்த மானுட இனம், சற்றும் மனம் தளராமல் புது நம்பிக்கைகளுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது. புத்தாண்டு பிறப்பும், அது தொடர்பான வழமையான விழாக்களும் ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படும் (உலகளாவிய) சம்பிரதாயமாக தெரிந்தாலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்கின்ற மானுடத்தின் வேட்கையை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது.

இருபதாவது நூற்றாண்டிலிருந்து இருபத்தியொன்றாவது நூற்றாண்டில் உலகம் அடியெடுத்து வைத்தபோது இந்த வேட்கை மிக உச்ச கட்டமாக இருந்தது. இன, மத, மொழி பேதங்களின்றி அனைவரும், நாட்காட்டியுடன் நிகழ்ந்த அந்த கால மாற்றத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், புத்தாயிரம் ஆண்டு பிறந்து 8 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், உலக வாழ்வில் ஏற்பட்ட (விரும்பத்தகாத) பல நிகழ்வுகள், மிகவும் ஆவலுடன் மானுடம் எதிர்பார்த்த மாற்றங்களுக்கு நேர் மாறாக பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.

farmer
webdunia photoWD
அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் நமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான வசதிகளை அளித்தன. இந்த மேம்பாடுகள் அனைத்தும் சமூகத்தின் இடைத்தட்டு, மேல்தட்டு மக்களின் வணிக, அலுவலக செயல்திறனைத்தான் மேம்படுத்தினவே தவிர, விவசாயிகள் உள்ளிட்ட சமூக வாழ்வின் ஆதாரமாகத் திகழும் அடித்தட்டு மக்களுக்கு எந்த வித்த்திலும் உதவிடவில்லை. பொருளாதார வாழ்விலும் கடைத்தட்டு மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அறிவியல் ரீதியான சாதனை என்று பறைசாற்றப்பட்டு உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட வீறிய விதைகள் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு மாறாக அவர்களின் வாழ்விற்கே உலைவைத்தது. இருபதாவது நூற்றாண்டின் இறுதியில் நடைமுறைக்கு வந்த உயிரியல் தொழில்நுட்ப பயங்கரத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமையை இறக்கிவைக்க அரசுகளும் முன்வரவில்லை. நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அவர்களுக்கு உதவியிருக்க வேண்டிய உயர் (உயிரி) தொழில்நுட்பம் உயிரைக் குடித்தது.
  1 | 2  >> 
மேலும்
த‌மிழக‌த்தை உய‌ர்‌த்‌திடுவோ‌ம்: முத‌ல்வ‌ர் பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து!
அடையாள‌த்தை தேடு‌ங்க‌ள்...
படி‌க்க நகை‌க்க
பு‌த்தா‌ண்டி‌ல் ச‌ி‌ரி‌த்தே ஆக வே‌ண்டு‌ம்
பு‌த்தா‌ண்டி‌ல் ‌சி‌ரி‌க்க!
பெண்களு‌ம் பு‌த்தா‌ண்டு‌ம்!