முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > 2007 ஒரு பா‌ர்வை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
2007-ல் இந்தியாவின் பொருளாதாரம்!
இந்த ஆண்டு இந்தியாவிற்கு பொருளாதார ஆண்டாகவே கருதலாம். இந்தியாவின் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவான 8 விழுக்காடா இருந்தது.

பணவீக்கம் விகிதம் 5 விழுக்காடாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால் பணவீக்க விகிதம் 3 முதல் 4 விழுக்காடுகளுக்குள் இருந்தது சிறப்பான அம்சமாக கருதலாம்.

பங்குச் சந்த

share
webdunia photoWD
பங்குச் சந்தையை பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு மிக சிறப்பான ஆண்டு. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 13 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1990 ஆம் ஆண்டு ஜூலை 25 ந் தேதி 1,000 ஆக இருந்தது. இது 10 ஆயிரமாக உயர்வதற்கு 10 ஆண்டுகள் ஆனது. (2006 பிப்ரவரி 6 ந் தேதி 10,000 ஐ தொட்டது) ஆனால் 21 மாதத்திலேயே சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்தை தொட்டது ( 2007 அக்டோபர் 29 ந் தேதி 20,000).

இதேபோல 1994 ஆம் ஆண்டு 3 ந் தேதி வர்த்தகம் தொடங்கப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 12 வருடத்தில் 6 ஆயிரமாக உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக உள்ளது.

இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடையலாம். அதே நேரத்தில் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் உயர்வது விரலுக்கு ஏற்ற வீக்கம் இல்லை. என்றாவது ஒரு நாள் சரியும் ஆபத்து இருக்கின்றது என்ற கருத்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்தின் வர்த்தகம், இலாபம், ஈவுத் தொகை, அதன் பொருளாதார பலத்துடன் ஒப்பிடுகையில் அதன் பங்குகளின் விலை அதிகமாக இருக்கின்றது என்ற கருத்தும் நிலவுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கவும் தவறுவதில்லை.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை பலமாக இருக்கின்றது. பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்து வருகிறது. இங்கு முதலீடு செய்வதால் அதிக இலாபம் கிடைக்கின்றது. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர்.

அத்துடன் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்களின் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி வருகிறது. 1900 ஆம் ஆணடுகளில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்திய போது அரசியல் ரீதியாக பலத்த எதிர்ப்பு இருந்தது. அத்தகைய சூழ்நிலை இப்போது இல்லை என்பதால், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லரை முதலீட்டார்கள் சிறிது பாதிக்கப்படுவார்கள். இருந்த போதிலும் பங்குச் சந்தை ஏற்றத்தை காணும் என்பதில் சந்தேகம் இல்லை என் உறுதியாக நம்புகின்றனர்.

பங்குச் சந்தையைப் பொறுத்த வரை பங்குகள் விலை அதிகரிப்பது, அதனால் குறியீட்டு எண்கள் உயர்வது ஒரு வழிப்பாதை அல்ல. இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தை உயர்வதும், வீழ்ச்சி அடைவதும் நடக்க கூடியதே. இதுதான் முந்தைய காலங்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டுள்ள பாடம். பங்குகளின் விலைகள் சரிவால் பல சில்லரை முதலீட்டாளர்களின் சேமிப்பு கடலில் கரைத்த உப்பாக கரைந்துள்ளது காணமல் போயும் உள்ளது. இவைகளையும் தாண்டி எல்லா தரப்பு முதலீட்டாளர்களும் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இந்த புது வருடத்தில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதை ஆருடமாக கூற முடியாது. முந்தைய ஆண்டுகளை விட சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையை, நமது எதிர்பார்ப்பை மட்டுமே வெளிப்படுத்த முடியம்.

  1 | 2 | 3 | 4 | 5  >> 
மேலும்
2007-ல் தமிழகம்!
2007 : ‌நீ‌தி‌த்துறை ‌தீ‌விர‌ச் செய‌ல்பா‌ட்டி‌ன் ‌திரு‌ப்புமுனை!
2007ல் இந்திய கிரிக்கெட்!