முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மெல்போர்னில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!
ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டு படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் நகரிலுள்ள கிளிஃப்டன் ஹில் விடுதிக்கு அருகே இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை காவல்துறையினர் இன்று காலை 6 மணியளவில் கண்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் என்று பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

இந்திய மாணவரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. அவருடைய காரில் பயணித்த ஒருவர்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று சந்தேகிப்பதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அடுத்து, வாடகைக் கார் ஓட்டுனர்கள், தங்களுடைய பாதுகாப்பிற்குத் தேவையான முன்னெச்சரிக்கை கருவிகளை கார்களில் பொறுத்த வேண்டும் என்று கோரி மெல்போர்னில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!
அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு நெருக்கடி : மக்களவையில் கேள்வி!
இ‌ந்‌திய‌ இசை‌க் கலைஞ‌ர்க‌ள், பூசா‌ரிக‌ளி‌ன் ‌விசா‌க்களை புது‌ப்‌பி‌க்க மலே‌சியா முடிவு!
இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உதவ கா‌ல் செ‌ன்ட‌ர், இணைய தள‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் ‌தி‌ட்ட‌ம்!
பிரிட்டனில் குடியேற்ற அதிகாரிகள் திடீர் சோதனை!
வெ‌ள்ளை மா‌ளிகை மு‌ன்பு இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர்க‌‌ள் போரா‌ட்ட‌ம்!