முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
 
குவைத்தில் தோல் மருத்துவர் பணி
Webdunia
குவைத் நாட்டில் உள்ள தோல் மருத்துவமனையில் தோல் சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாற்ற விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இலவச இருப்பிடம், விமான டிக்கெட் மற்றும் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படும்.

தகுதியும், முன் அனுபவமும் உள்ளவர்கள் தங்களின் பணி தொடர்பான விவரங்களை விரிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணப் புகைப்படத்தினை இணைத்து அனுப்ப வேண்டும்.

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
தமிழ்நாடு வீட்டு வசதி வணிக வளாகம்,
முதல் தளம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
அடையாறு, சென்னை - 20 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வரும் 9ஆம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும்
30 வயதிற்குக் குறைவான இந்தியப் பெண்கள் அயல்நாடுகளில் பணியாற்றத் தடை!
அயல்நாடு சென்று பணியாற்றுவோரை காக்க புதிய திட்டங்கள்!
சவுதியில் இருந்து 750 இந்தியர்கள் வெளியேற்றம்
என்.ஆர்.ஐ.களால் திருமணம் செய்து கைவிடப்படும் பெண்கள்
அமெரிக்காவில் தமிழக கணினி பொறியாளர் சுட்டுக்கொலை!
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை : இந்தத் தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்!