முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  என்.ஆர்.ஐ  சிறப்புச் செய்திகள்
 
சவுதியில் இருந்து 750 இந்தியர்கள் வெளியேற்றம்
Webdunia
ஹஜ் புனித யாத்திரைக்காகச் சென்று விசா காலம் முடிவடைந்தும் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் 750 இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் அரேபிய அரசு ஈடுபட்டுள்ளது.

ஹஜ் தங்குமிட அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்குச் சென்று அங்கு அனுமதி காலத்திற்கும் மேலாக தங்கி வேலை தேடி வருபவர்களை வெளியேற்றும் முயற்சியில் அந்நாட்டு அரசு மும்முரமாக செயலாற்றி வருகிறது.

அதன்படி, செட்டாவில் உள்ள தர்கீ வெளியேற்றும் மையத்தில் 350 இந்தியர்களும், மதினா உல் அஜ் வெளியேற்றும் மையத்தில் 350 இந்தியர்களும் வெளியேற்றும் நடிவடிக்கையாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று செட்டாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருக்கும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் இயங்கும் உதவி நிலையத்தை அமைத்துள்ளது. விசா காலம் முடிந்த இந்தியர்கள் தகுந்த ஆவணங்களுடன் இந்த மையத்திற்கு வந்து தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
என்.ஆர்.ஐ.களால் திருமணம் செய்து கைவிடப்படும் பெண்கள்
அமெரிக்காவில் தமிழக கணினி பொறியாளர் சுட்டுக்கொலை!
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை : இந்தத் தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடாக உயரும்-ஆர்.பி.ஐ.!
ஹெச்1 பி விசா எண்ணிக்கை இருமடங்காக உயர்வு!
வருமான வரி தாக்கல் செய்ய புதிய படிவம் அறிமுகம்!