ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் கிரீம் பட்டர், சர்க்கரை சேர்த்து, எலக்ட்ரிக் மிக்சரால் நன்கு அடித்துக் கலக்கவும்.
பிறகு அதில் முட்டையின் வெள்ளைக் கரு, கோக்கோ தூள், பேக்கிங் பவுடர் சேர்த்து மிருதுவாகும் வரை நன்றாக அடித்துக் கலக்கும்போது அதிக அடர்த்தியாகாமல் இருக்க சிறிதளவு தண்ணீரை அதில் சேர்த்து இலகுவாக்க கிளறுங்கள்.
பேக்கிங் பவுடரை சேர்த்து குக்கீ பேக்கிங் தாளில் அதைத் தடவி, ஏற்கனவே தயாரித்திருக்கும் கலவையை சிறு உருண்டையாக்கி, தாளின் மீது வைத்து தட்டவும்.
350 டிகிரி வெப்பத்தில் ஒரு 20 நிமிடம் அதை வேக வைக்கவேண்டும்.
அதன்பிறகு அதன் மேற்புறம் மொறுமொறுப்பான பதம் வந்ததா என்று தொட்டுப்பார்த்துவிட்டு, குக்கீ நன்றாக வெந்ததாக என கத்தியால் வெட்டிப்பார்க்கவும்.
நன்றாக வெந்ததும் அதை துண்டுகளாக வெட்டியெடுத்து பரிமாறவும்.
|