முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > தேச காஃபி வாரியம் > காஃபி ரூ‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஃபி தூக்கத்தை குறைக்குமா?
காஃபி குடிப்பதால் தங்களின் தூக்கம் கெடுவதாகவும், மாலை நேரத்தில் காஃபி குடிப்பதை தவிர்ப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். காஃபி குடிக்கும் போது அந்த நாள் முழுவதும் உடலில் உற்சாகம் ஏற்பட்டு விழிப்பாக பணியாற்ற உதவுகிறது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். காஃபி குடிப்பது நமது ஆழ்ந்த தூக்கத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு ஏழு கப் காஃபி குடித்தாலும், குறைந்த நேரம் தூங்குவதற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், மாறாக வயது முதிர்வு, குடும்ப பிரச்சினைகள் போன்ற சில காரணங்களால் தூக்கம் கெடுகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான பெண்களிடையே சோதித்து பார்த்ததில், குறைந்த நேரம் தூங்குபவர்களும் அதிக நேரம் தூங்குபவர்களும் காஃபின் பொருட்கள் இருக்கும் காஃபியை குடிப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தலைவலியிலிருந்து நிவாரணம் பெற காஃபி உதவுமா?

தலைவலியினால் அவதிப்படுவோர் ஏராளம் உண்டு, ஆனால் காஃபி குடிப்பதால் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிப்பது நமக்கெல்லாம் நற்செய்தி. தலைவலியால் அவதிப்படுபவர்களில் வலிநிவாரணியையும் காஃபினையும் சேர்த்து உட்கொண்ட 80 சதவீதம் பேர் 6 மணிநேரத்தில் நிவாரணம் பெறுகின்றனர் எனவுமவெறும் வலி நிவாரணியை எடுத்துகொண்டவர்களில் 67 சதவீதம் பேர்தான் நிவாரணம் பெற்றனர் எனவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்டாராங்கான ஒரு கப் காஃபியில் உள்ள காஃபின் மைக்ரேன் தலைவலியைக் கூட சரி செய்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் நீர்மமான ஆல்கஹாலில் உள்ள கூறுகளால் இரத்த நாளம் சார்ந்த தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் காஃபினில் உள்ள கூறுகளானததலையில் விரிந்துள்ள இரத்த நாளங்களை சுருக்கி தலைவலியிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

காஃபியால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுமா?

நெஞ்சு எரிச்சல் அல்லது உணவு செரிக்காமை என்ற பொதுவான நிலை ஏற்பட எண்ணெய், கொழுப்பு சேர்ந்த உணவுவகைகளை உட்கொள்வது முதல் அதிக மன உளைச்சல் வரைப் பல காரணங்கள் உள்ளன. நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்டோரை பரிசோதித்தலில், அவர்களுக்கான நெஞ்சு எரிச்சல் வாயுத் தொல்லையினாலோ அல்லது காஃபியினாலோ ஏற்படவில்லஎன்பதை அந்த ஆய்வு விளக்குகிறது. காஃபி குடித்தபிறகு நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்படுவதாக சிலர் புகார் செய்கின்றனர். ஆனால் அந்த நெஞ்சு எரிச்சல் அவர்கள் காஃபி உட்கொள்வதற்கு முன் உண்ட உணவின் காரணமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். காஃபி குடிப்பது வயிற்றிற்கு நல்லதல்ல என்றோ அல்லது வாயு தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றோ இதுவரை எந்த ஆய்விலும் கூறப்படவில்லை.
1 | 2  >>