முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இடுக்கு
-சுப்ரபாரதி மணியன்
வலி நிவாரண மாத்திரியை விழுங்கினேன் என்பது சட்டென ஞாபகம் வரவில்லை. எல்லாம் அவசரகதியாய் போய்விட்டது. அவசர கதியில் எந்த கணம் மனதை விட்டு அகல்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. இப்படி மனதிலிருந்து கழன்று போனவை ஏராளம். இப்போதைக்கு வலி நிவாரண மாத்திரை.

வலி நிவாரண மாத்திரை - 200. என்று மருந்துக் கடையில் கேட்டு வாங்கினது, வலி அதிகமாக இருந்தால் 400ஐ சாப்பிடுமாறு மருத்துவர் சிபாரிசு செய்தார். உண்மையான மருத்துவராக இருந்தால் வலி நிவாரண மாத்திரைக்கே சிபாரிசு செய்திருக்க மாட்டார். அப்படியொன்றும் அவர் போலி டக்டர் அல்ல. வயது முதிர்ந்தவர்தான்.

ஆங்கில மருத்துவத்தில் இதைவிடப் பெரிய உபாயம் எதுவுமில்லை என்பது தெரிந்ததுதான். வலியுணர்வை அழித்து மூன்று மணி நேரத்திற்கு சொஸ்தமளிக்கும் வலி நிவாரணியைத் தவிர அவரால் வேறெதையும் பெரிசாய் சிபாரிசு செய்து விட முடியாதுதான். வலி நிவாரணி கொஞ்சூண்டு விஷம் என்று நண்பர் ஒருவர் சொல்வார். பல வருடங்களாய் இந்த விஷத்தை சாப்பிட்டு வருகிறேன். நீலகண்டனாய் ஜீவித்து வருவது பேருவகை தரும் விஷயம்தான். எப்போதாவது அல்சர் மாதிரி வந்து விஷத்தின் அளவு சற்று அதிகமாகியிருப்பதைக் காட்டிவிடும். அதைக் குறிப்பேட்டில் குறிக்க வேண்டிய நாளை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.


சாப்பிட்ட பின்புதான் வலி நிவாரணியை விழுங்கவேண்டும் என்பது விதி. விதியைச் சரியாக கடைபிடித்து வந்திருக்கிறேன். பல சமய‌ங்களில் சாப்பிட்ட பின் நீரருந்தும் போது, சாப்பிட்ட பின் பத்து நிமிடங்களுக்கு உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும். எனவே அப்போது நீரருந்துதல் நல்லதால்ல என்று குழந்தைகளுக்கு பாலபாடம் கற்றுத் தந்திருக்கிறேன். அவர்களும் பல சமயங்களில் அதை மற்றவர்களுக்குப் பாடமாய் சொல்கிறபோது எனது ஆசிரிய பெருமை உவகை கொள்ள வைத்திருக்கிறது. ஆனா வலி நிவாரணி விஷயத்தில் சாப்பிடாமல் மறந்து போய் விட்டால் என்ன செய்வது என்று சாப்பிட்டு முடிந்த எச்சிற் கையோடு வலி நிவாரணியை அட்டையிலிருந்துப் பிய்த்தெடுத்து வாயில் போட்டுக் கொள்வது உடனடி கர்மமாக இருந்திருக்கிறாது. இன்றைய காலை வேளையில் அதை கர்மமே கண்ணாகச் செய்தா‌ன் என்பதில் தான் ஞாபகப்பிசகு.

இரண்டு சக்கர வாகனத்தை கிளப்புவதற்காய் இடது கையை வாகனத்தின் கியரில் அழுத்திய போது எழுந்த வலி உச்சமாக இருந்தது. வலி நிவாரணியைச் சாப்பிட்டேனா இல்லையா என்பது உறுத்தலாக இருந்தது. காலை உணவிற்குப் பின் எச்சிற் கையோடு சாப்பிட்டிருந்தாலும் வலி உடனே குறைய வாய்ப்பில்லை. இரண்டு மணி நேரம் ஆகி ரத்தத்தில் கலந்த பின்புதான் அது நிவாரணமளிக்கும். அதுவரைக்கும் வலி இருந்துகொண்டேதான் இருக்கும்.

ரத்தத்தில் மாத்திரை கரைவதற்குள்தான் எத்தனை இம்சை. வலி உயிரை சில்லறையாய் பிய்த்தெடுத்து வாட்டிக் கொண்டிருக்கும். ரத்தத்தில் மாத்திரை கலக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பது இன்னொரு பாலபாடம் என்பது ரொம்ப நாளாய் தெரியாமல் இர்ந்தது. பக்கத்து வீட்டில் ஒரு பெண். முப்பத்தைந்து வயதினள். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவள். தற்கொலை செய்வது பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பாள். கண்ணாடி பாட்டிலை தூள் தூளாக்கி விழுங்குவது, தூக்குமாட்டிக் கொள்வது, சமயலறை கேஸ் சிலின்டர் என்று பட்டியல் இட்டுக் கொண்டே இருப்பாள். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த போதும் இந்தப் பட்டியல் இடுவது தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு தரம் இன்னொரு பாலபாடத்தைக் கண்டுபிடித்தாள். ஒரு முதியவர் மருத்துவமனைக்கு உடல் உபாதைக்காக சென்றிருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான உயர்ந்த விலை டானிக் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவிற்குப் பின்னும், இரவு உணவிற்குப் பின்னும் ஒவ்வொரு ஸ்பூன் சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். முதியவர் உடனடி ஆரோக்கிய உயர்விற்காய் முழு டானிக் பாட்டிலையும் ஒரே தினத்தில் ருசிக்கப் போக மரணம் சம்பவித்து விட்டது. இது பற்றி யாரோ பிரஸ்தாபிக்க மொத்தமாய் மருந்தை உபயோகிப்பதன் பலனை அறிந்து கொண்ட அந்தப் பெண் இருபது நாட்களுக்கு...
1 | 2 | 3  >>  
மேலும்
வான்கோவின் காது!
குழந்தை - டோனல்ட் பார்தெல்மே
மூன்று எளிய வாக்கு மூலங்கள்
அறிவு கொளுத்தும் ஒரு கதை
நரகம்
தெரசா என்று கத்திய மனிதன்!