முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குழந்தை - டோனல்ட் பார்தெல்மே
குழந்தை - டோனல்ட் பார்தெல்ம
நன்றி : சிதைவு (சிற்றிதழ்)
தமிழில் சி.மோகன்

டோனல்டபார்தெல்மே ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஃபிலடல்பியாவில் பிறந்தார். நான்கு முறை திருமணம் செய்துகொண்ட இவர் 1989 ஆம் ஆண்டு தன் 58ஆவது வயதில் தொண்டை புற்று நோயால் மரணமடைந்தார். இன்று பரவலாக பேசப்படும் பின் நவீனத்துவ புனைவுலகில் முக்கிய படைப்பாளி. சிறுகதை புனைவுலகில் அதிகபட்ச பரிசோதனைகளை செய்து காட்டியவர். இவரது கண்ணாடி வீடு என்ற நாவல் பிரசித்தி பெற்றது. அர்த்தங்களை வலியுறுத்தும் மனோபாவத்திலிருந்து விடு பட நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதியவர். 1949 ஆம் ஆண்டு ஹஸ்டன் பல்கலைகழகத்தில் இதழியலை மையப் பாடமாக எடுத்து படித்தபோது 20வது வயதிலேயே பல்கலைகழக இதழ் ஒன்றின் பொறுப்பாசியராக நியமிக்கப்பட்டார். அன்று அது ஒரு சாதனை. பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே ராணுவ செய்தித்தாளின் செய்தியாளராக பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு நியூயார்க் சென்று முழு நேர எழுத்து வாழ்வை மேற்கொண்டார்.]

குழந்த

குழந்தை செய்யத் தொடங்கிய முதல் தவறு, தன் புத்தகங்களிருந்து பக்கங்களைக் கிழிக்க ஆரம்பித்ததுதான். அதனால், அவள் புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் பக்கத்திற்கு நான்கு மணி நேரமென அவள் தன் அறையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தனியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு விதி செய்தோம். அவள் ஒரு நாளில் ஒரு பக்கம் கிழித்த ஆரம்ப காலக் கட்டத்தில் இவ்விதி - மூடிய அறையிலிருந்து எழும் அழுகையும் கதறலும் பதற்றம் தந்த போதிலும் - நன்றாகவே செயல்பட்டது. உன் தவறுக்கான தண்டனையை அல்லது தண்டனையின் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளவே வேண்டுமென நாங்கள் நியாயப்படுத்தினோம். ஆனால், பிறகு அவளின் பிடிமானம் வளர்ச்சியடைந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களை கிழித்தெறிந்தாள். அதன் காரணமாக, மூடிய அறையில் தனியாக அவள் எட்டு மணி நேரம் இருக்க வேண்டி ஆயிற்று.

அதற்கேற்ப தொல்லை எல்லோருக்கும் இரண்டு மடங்காகியது. எனினும், அவள் அவ்வாறு செய்வதை நிறுத்துவதாக இல்லை. அதன் பிறகு, நாட்கள் செல்லச்செல்ல, அவள் மூன்று அல்லது நான்கு பக்கங்களை கிழிக்கும் நாட்களை நாங்கள் எதிர் கொள்ள வேண்டி வந்தது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் வரை அவள் தன் அறையில் தனியாக இருக்கும்படி ஆயிற்று. வேளா வேளைக்கு உணவு கொடுப்பதற்கு இது இடையூறாக இருந்ததால் என் மனைவி கவலைப்பட்டாள். ஆனால் நாம் ஒரு விதியை உருவாக்கினால் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டுமெனவும், பாரபட்சமோ, தளர்வோ காட்டாமல் இருக்க வேண்டுமெனவும் நான் நினைத்தேன். இல்லையெனில் அவர்கள் தவறான கருத்து கொண்டு விடுவார்கள்.

அந்தச் சமயத்தில் அவள் 14 அல்லது 15 மாதங்கள் நிரம்பியவளாக இருந்தாள். அவ்வப்போது ஒரு மணி நேரம் போலக் கதறிய பின்பு அவள் தூங்கிவிடுவதென்னவோ உண்மைதான். அது கருணையின்பாற்பட்டது. அவள் அறை மிகவும் அழகானது. மரத்தினாலான அழகிய ஆடுகுதிரையும், நூறு பொம்மைகளும், பொதிக்கப் பட்ட மிருகங்களும் நிறைந்தது. நேரத்தை பிரயோஜனமாகப் பயன்படுத்தினால் புதிர் விளையாட்டு போன்ற பல்வேறு காரியங்களை அந்த அறையில் செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் கதவைத் திறக்கும் சில சமங்களில் மேலும் சில புத்தகங்களிலிருந்து மேலும் சில பக்கங்களை, அவள் உள்ளே இருக்கும்போது கிழித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தப் பக்கங்களையும் உரிய வகையில் கணக்கில் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.

குழந்தையின் பெயர் பார்ன் டான்சின். எங்களுடையதிலிருந்து குழந்தைக்கு
1 | 2  >>  
மேலும்
மூன்று எளிய வாக்கு மூலங்கள்
அறிவு கொளுத்தும் ஒரு கதை
நரகம்
தெரசா என்று கத்திய மனிதன்!
பொ‌ங்கலு‌ம் ஒடை‌ஞ்ச பானையு‌ம்... (சிறுகதை)
புளியம் பூ