'என் சாவி என்னிடம் உள்ளது'- நான் கூறினேன். 'அப்படியானால் ஏன் நீங்கள் மேலே போகக் கூடாது?' 'நான் இங்கே வசிப்பவன் அல்ல. நான் நகரின் அந்தப் பக்கத்தில் வசிக்கிறேன்' 'சரி, அப்படியானால் பிறர் காரியங்களில் ஆர்வமுள்ள என் துடிப்பை மன்னியுங்கள்' புள்ளிகள் கொண்ட குரல்காரன் கவனமாகக் கேட்டான் 'யார்தான் இங்கு வசிக்கிறார்கள்?' 'எனக்கு நிஜமாகத் தெரியாது'
இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்தவர்கள் தொந்தரவான உணர்வடைந்தார்கள்
'எனவே தயவு செய்து நீங்கள் விளக்கம் தருவதற்கு முடியுமா? மிகவும் பல் சார்ந்த குரல் கொண்ட யாரோ ஒருவர் கேட்டார், 'ஏன் இங்கு நின்று கொண்டு தெரசாவைக் கத்தி அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'
நான் சொன்னேன், : என்னைப் பொறுத்தவரையில், நாம் வேறு ஒரு பெயரைக் கூட கூப்பிடலாம் அல்லது வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
மற்றவர்கள் சிறிது தொந்தரவாக உணர்ந்தார்கள்
'நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை என்று நான் நம்புகிறேன்' புள்ளிகள் நிறைந்த முகத்துக்காரன் சந்தேகமாகக் கேட்டான்.
என்னது? நான் கேட்டேன் கோபமாக. மற்றவர்களிதம் திரும்பினேன் எனது நம்பிக்கையை உறுதி படுத்தும் பொருட்டு. மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. புள்ளிகள் உதைய முகத்துக்காரனின் தூண்டி விடும் முயற்சி தோல்வியடைந்தது.
ஒரு தர்ம சங்கடமான கணம் நிலவியது,.
'கவனியுங்கள்' யாரோ ஒருவர் நல்ல தன்மையுடன் கூறினார், ' ஏன் நாம் அனைவரும் ஒரு முறை தெரசாவை கூப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்லக்கூடாது?
எனவே நாங்கள் மீண்டும் தொடங்கினோம், ஒன்று இரண்டு மூன்று 'தெரசா' ஆனால் இந்த முறை அது சரியாக வரவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள். சிலர் ஒரே வழியிலும், பலர் வேறு வழியிலும்.
சதுக்கத்திற்குள் ஏற்கனவே நான் திரும்பி விட்டேன். அப்போது ஒரு குரல் தொடர்ந்து 'தெ--ரீ-சா!' என்று கூப்பிடுவதாக தோன்றியது.
யாரோ ஒருவர் கத்துவதற்காக நின்றிருக்க வேண்டும். மிகப்பிடிவாதமான ஒருவர். - ஆங்கிலம் வழி தமிழில் - பிரம்மராஜன்
|