முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
மழை
Webdunia
மழை (காலாண்டிதழ்)

வெளியீடு : நா. விஸ்வநாதன்

ஆசிரியர் : யூமா வாசுகி

யுனைடெட் ரைட்டர்ஸ் அமைப்பின் வெளியீட்டு பிரிவின் கீழ் யூமா வாசுகியை ஆசிரியராகக் கொண்ட `மழை' என்ற காலாண்டிதழ் வெளியாகியுள்ளது!

மீண்டும், கட்டுரை, கதை, கவிதை, நூல் விமர்சனம், நேர்காணல் என்ற பொத்தம்பொது அம்சம் கொண்டே இந்த சிற்றிதழ் வெளிவருகிறது. ஆனால் மிக புதிய பகுதி ஒன்று - சிற்றிதழ்களுக்கு இதுவரை அகப்படாத பிரதேசமான `காமிக்ஸ்' என்ற பகுதியில் சிறுவர்களுக்கான `காமிக்ஸ்' படக்கதை ஒன்றும், தமிழில் `அரசியல் நையாண்டி' படக்கதை ஒன்றும் வெளியாகியுள்ளது. மற்றபடி சிற்றிதழ் சேர்ந்த எழுத்தாளர்களின் வெளிப்பாடுகளே அதிகம் காணப்படுகிறது.

இது இதழ் வடிவில் வராமல் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த `மழை' இதழிலிருந்து எஸ். இராமச்சந்திரனின் "கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்" என்ற கட்டுரையை வெப் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்!
-எஸ். இராமச்சந்திரன்

அரசியல் அல்லது சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தோர், மக்களிடையே நெடுங்காலமாக நிலவி வருகிற நம்பிக்கைகளை, தமது இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு புதுமையானதன்று. சமய நிறுவனங்களைச் சார்ந்தார், தத்தமது சமயக் கோட்பாடுகளை மக்களிடையே வேரூன்றச் செய்வதற்காக, அம்மக்களுடைய மொழியுணர்வையும் வழிபாட்டு நம்பிக்கைகளையும் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

அவ்வகையில், பெண்ணின் மார்பகம் பற்றிய பழங்குடி நம்பிக்கையொன்று, இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் இடம்பெற்று வந்துள்ளது என நாம் ஆராய்ந்தால் சுவையான செய்திகள் கிடைக்கின்றன. இன்றைக்கு, தொழில் வணிக நிறுவனங்களால் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுக் கொச்சைப்படுத்தப்படுகிற கொங்கைகள் நாம் காண இருக்கிற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம், முற்றிலும் வேறுபட்டதாகும்.

கன்னிப் பெண்ணின் மார்பகத்தில் அணங்கு என்ற பெண் தெய்வம் உறைவதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்தெய்வத்திற்கு `வீற்று தெய்வம்' (அதாவது வீறுமிக்க உக்கிரமான தெய்வம்) என்று உரையாசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர். பொதுவாகத் திருமணமாகாத கன்னிப் பெண் உக்கிரமான தெய்வசக்தி நிரம்பியவளாகக் கருதப்படுவது வழக்கம். மணமாகாமல் இறந்து விட்ட கன்னிப் பெண்ணைத் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றும் தமிழகத்தில் உள்ளது. இத்தகைய பின்புலத்தில் பார்க்கும் போது,

பெண்மையின் முதன்மையான அடையாளமாகக் கருதப்பட்ட மார்பகத்தில் உக்கிரமான தெய்வம் உறைந்ததாகச் சங்க காலத் தமிழர்கள் கருதியதில் வியப்பில்லை. புன்கமரத்தின் தளிர்களைக் கொங்கையில் பிணைத்துக் கட்டி இந்த உக்கிரமான தெய்வத்தினைச் சாந்திப்படுத்தும் வழக்கம் இருந்தது என்று நற்றிணைப் பாடல் ஒன்றினால் அறிகிறோம். பெண் கன்னி கழியும் நிகழ்ச்சி `சாந்தி முகூர்த்தம்' என்று கூறப்படுவது இதோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கத்தக்கது. திருமணமான பின்னர், குறிப்பாகச் சொல்வதானால் குழந்தை பிறந்த பின்னர், பெண்ணின் மார்பகத்திலுள்ள உக்கிர சக்தி, குழந்தையைப் பாலூட்டி வளர்க்கிற உன்னதமான சக்தியாக மாற்றமடைந்து விடுகிறது என்பதால் தான் கன்னிப் பெண்ணின் மார்பில் மட்டும் அணங்கு உறைவதாக நம்பப்பட்டது.
1| 2
மேலும்
குளிர்சாதனப் பெட்டி
சிற்றிதழ் : கவிதாசரண்
நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன்
அராபிய இலக்கியங்களில் இந்தியா
மெக்பெத்தின் தனிமை -அகிரா குரசேவா
சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம் - இந்திரா பார்த்தசாரதி