"அப்போது, வேறு எந்த பதிப்பகமும் இப்படியான முயற்சியில் ஈடுபடலையா?"
"அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலமானவர்கள் எழுதினால் வெளியிடுவார்கள். வாரப் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அதில் தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு புத்தகம் போடுவார்கள். விற்றுப் போகும். விற்பனையைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர் "சக்தி" காரியாலயம் வை.கோவிந்தன் தான். நான் வேறு சில திட்டங்களை முன்வைத்தேன்."
"என்னென்ன மாதிரியான திட்டங்கள்...?"
வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்... இப்போ நிலைமை எப்படி இருக்கு?"
மௌனம். தொடர்கிறார்,
"சரி, ராஜாஜிக்கே அந்த நிலைமை. ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் "வாசகர் செய்தி" என்கிற செய்திக் கடிதத்தை வெளியிடுவேன். அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.
பின்னாளில், நூலகங்களுக்காக கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" இதழை வாசகர் வட்டம் மூலமாகவே நடத்தினேன்."
"எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்"
"தமிழ்க்கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா? என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே."
"அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலமானவர்கள் எழுதினால் வெளியிடுவார்கள். வாரப் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அதில் தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு புத்தகம் போடுவார்கள். விற்றுப் போகும். விற்பனையைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர் "சக்தி" காரியாலயம் வை.கோவிந்தன் தான். நான் வேறு சில திட்டங்களை முன்வைத்தேன்."
"என்னென்ன மாதிரியான திட்டங்கள்...?"
வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய்
கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்... இப்போ நிலைமை எப்படி இருக்கு?"
|