முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
அராபிய இலக்கியங்களில் இந்தியா
எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்

துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.

தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.

முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.

இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.

அகமத் ஷாகி, காந்தி 1931-ல் லண்டன் வட்டமேசை மாநாட்டிற்கு செல்லும் வழியில் எகிப்திற்கு வந்தபோது ஒரு அற்புதமான நீண்ட கவிதையை இயற்றியுள்ளார். இதில் காந்தியை அவரது தன்னலமற்ற தொண்டிற்காகவும், மனித உரிமைகளை காப்பதற்காக போராடுவதற்காகவும் நபிகள் நாயகத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

1| 2| 3
ஆதாரம் - - எம்.எஸ்.அஷ்ரஃப்
மேலும்
மெக்பெத்தின் தனிமை -அகிரா குரசேவா
சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம் - இந்திரா பார்த்தசாரதி
பூமணியின் `பிறகு' - நாவலை முன்வைத்து. . . - ஆர். முத்துக்குமார்
நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம் -உம்பர்த்தோ ஈகோ
ரிக்வேதரிஷி - வெங்கட் சாமிநாதன்
அமெரிக்காவில் ஆல்பெர் காம்யு - ஸெர்ஜ் தூப்ரோஸ்கி