|
நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்
-உம்பர்த்தோ ஈகோ
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-உம்பர்த்தோ ஈகோ
மக்கள் தொகை குறைந்து உடல் ரீதியாக வலிமை குன்றிய போது, நிலப்பகுதி தொடர்பாக வரும் நோய்களாலும் (காசநோய், தொழுநோய், சீழ்ப்புண்கள், தோல்படை, கழலை) பிளேக் போன்ற பயங்கர கொள்ளை நோய்களாலும் மக்கள் அழிந்தனர். கடந்து போன நூற்றாண்டுகளில் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் ஈடுபடுவது எப்போதும் அபாயம் நிரம்பியது; ஆனாலும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வசித்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 1 கோடியே 40 லட்சத்திற்குக் குறைந்து போனது; வேறு சிலர் எட்டாம் நூற்றாண்டில் 1 கோடியே 70 லட்சம் மக்கள் இருந்தார்கள் என்று யூகிக்கிறார்கள். அருகிப் போன விவசாயம், குறைவான மக்கள் தொகையோடு சேர்ந்து அநேகமாக எல்லாரையும் ஊட்டச்சத்து குறைவர்களாக ஆக்கியது.
இரண்டாவது ஆயிரம் ஆண்டு தொடங்கியபோது எண்கள் மாறின. மக்கள் தொகை பெருகியது. 950 ல் இரண்டு கோடியே இருபது லட்சம் ஐரோப்பியர்கள் இருந்ததாக சில நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். வேறு சிலர் 1000 ல் நான்கு கோடியே இருபது லட்சம் என்று சொல்கிறார்கள். 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள் தொகை 6 கோடிக்கும் 7 கோடிக்கும் இடையில் ஊடாடியது. எண்ணிக்கைகள் மாறினாலும் ஒரு விஷயத்தில் ஒப்புமை தெரிகிறது; ஆயிரமாவது வருடத்திற்குப் பின் வந்த ஐந்து நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள் தொகை இரண்டு மடங்காகியுள்ளது. ஒருவேளை மூன்று மடங்காகவும் ஆகியிருக்கலாம்.
ஐரோப்பாவின் திடீர் உயர்வுக்கான காரணங்கள் இவை என்று குறிப்பாகச் சொல்வது கடினம்; பதினோராம் நூற்றாண்டுக்கும் இடையில் அரசியல் வாழ்க்கை, கலை, பொருளாதாரம், நாம் இனி பார்க்கப்போகும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டன. உடல் சக்தி மற்றும் கருத்துக்களில் உண்டான புது எழுச்சியை அக்கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். முதல் ஆயிரம் ஆண்டின் கடைசி வருடங்களில் பிறந்த துறவியான சுயனரடயீhரள ழுடயாநச என்பவர் தன்னுடைய பிரபலமான ழளைவடிசயைசரஅ (வரலாறுகளின் ஐந்து புத்தகங்கள்' என்று ஆங்கிலத்தில் அறியப்படுவது) என்ற நூலை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதத் துவங்கினார். வாழ்க்கையைப் பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை; 1033ல் உண்டான பஞ்சத்தைப் பற்றிச் சொல்கையில், மிகவறிய உழவர்கள் மத்தியில் நிலவிய கொடிய நரமாமிசம் உண்ணும் பழக்கங்களை விவரிக்கிறார். ஆனால் ஆயிரமாவது ஆண்டு முதல் ஒரு புது வீரியம் கிளர்ந்தெழுவதையும், அது வரை மோசமாக இருந்த நடப்புக்கள் ஆக்கபூர்வமான திருப்பத்தை அடைவதையும் அவர் எப்படியோ உணர்ந்துவிட்டார்.
இடைநிலைக்காலத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இன்றும் தனித்துத் தெரியும் கவிதைமயமான ஒரு பத்தியில், முதல் ஆயிரம் ஆண்டின் முடிவில் வசந்தகாலப் புல்வெளியைப் போல பூமி திடீரென மலர்ந்து தழைத்ததை அவர் உணர்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறார் : `ஆயிரமாவது ஆண்டு முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன. உலகம் முழுதும், குறிப்பாக இத்தாலியிலும், ழுயரட நாட்டின் பகுதிகளிலும், ரோமானிய பாணியிலான சர்ச்சுக்கள் நிர்மாணிக்கப்பட்டன... ஒவ்வொரு கிறிஸ்துவ நாடும் அதி உன்னத அழகை அடைய பாடுபட்டன. விழித்தெழுந்து பழைய காலத்தை உதறியெறிய முயன்ற இந்த பூமியே சர்ச்சுகளின் வெள்ளை நிற மேலங்கியை ஆடையாக அணிந்து கொண்டதைப் போல தோன்றியது.'
ரோமானிய பாணியிலான கலை (இதைப்பற்றித்தான் சுயனரடயீhரள பேசிக் கொண்டிருந்தார்) திடீரென்று 1003 ல் முகிழ்த்துவிடவில்லை; சுயனரடயீhரள ஒரு சரித்திர ஆசிரியரைப் போலல்லாமல் அதிகம் ஒரு கவிஞரைப் போல எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், பல்வேறு நகர அரசுகளுக்கிடையே நிலவிய அதிகாரம் மற்றும் கௌரவம் தொடர்பான பகைமையைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். புதிய கட்டடக்கலை நுணுக்கங்களைப் பற்றியும், ஒரு புதிய புத்தெழுச்சியைப் பற்றியும் - பொருளாதார வளம் இல்லாமல் அத்தகைய சர்ச்சுக்களைக் கட்டியிருக்க முடியாது - பேசிக் கொண்டிருந்தார். பழைய சர்ச்சுக்களை விடவும் அளவில் பெரிய, வளரும் மக்கள் தொகைக்கு இடவசதி அளிக்கும் பெரிய, வளரம் மக்கள் தொகைக்கு இடவசதி அளிக்கும் விதத்தில் கட்டப்பட்ட சர்ச்சுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
ஷார்லமெயினின் சீர்திருத்தங்கள், ஜெர்மானியப் பேரரசின் ஸ்தாபிதம், பொலிவு பெற்ற நகரங்கள், கம்யூன்களின் தோற்றம் ஆகியவை காரணமாக பொருளாதாரச் சூழலும் மேம்பட்டது என்று தயங்காமல் சொல்லலாம். இதற்கு எதிர்மறையான ஒன்றையும் - அதாவது, ஏதோ ஒன்றால் அன்றாட வாழ்க்கை மற்றும் பணிபுரிய ஏதுவான சூழல்கள் ஆகியவை மேம்பட்டதால் அரசியல் சூழல் மலர்ந்தது, நகரங்கள் வளம் கொழிந்தன என்று சொல்வது சாத்தியம்தானே?
ஆயிரமாவது ஆண்டுக்கு முந்தைய நூற்றாண்டுகளில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாறும் பயிர் சுழற்சி முறை மெதுவாக மேற்கொள்ளப்பட ஆரம்பித்தது. இதன் மூலம் நிலத்தின் வளம் அதிகரித்தது. ஆனால் விவசாயத்திற்கு உபகரணங்களும், பணியாற்றும் விலங்குகளும் தேவைப்படுகின்றன; இந்தத்தளத்திலும் புதிய கண்டுபிடிப்புக்கள் தோன்றின. ஆயிரமாவது ஆண்டுக்கு சற்று முந்திதான் குதிரைகளுக்கு இரும்பு லாடங்களும் (அதுவரை குதிரைகளின் குளம்புகள் துணியால் கட்டப்பட்டிருந்தன), குதிரையைச் செலுத்துபவர்கள் பாதங்களை வைத்துக் கொள்ளும் தாங்கிகளும் பொருத்தப்பட்டன. இந்தத் தாங்கிகள் போர்வீரர்களுக்கே அதிகம் பயன்பட்டன. உழவர்களுக்கு அவற்றால் பயன் குறைவுதான். குதிரைகள், எருதுகள் மற்றும் பாரம் சுமக்கும்விலங்குகளுக்கென்று ஒரு புது வகையான கழுத்துப்பட்டை கண்டுபிடிக்கப்பட்டது; அது ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்பது நிரூபணமானது. பழைய வகை கழுத்துப்பட்டைகள் எல்லா பளுவையும் விலங்கின் கழுத்துத் தசைநார்கள் மீதே சுமத்தி அதன் மூச்சுக்குழாயை அபாயத்துக்குள்ளாக்கின. புதுக் கழுத்துப்பட்டை மார்புத்தசை நார்களை சேர்த்திணைப்பதால் விலங்கின் திறன் மூன்றில் இரண்டு மடங்கு அதிகரித்தது; சில பணிகளில் எருதுகளுக்குப் பதிலாகக் குதிரைகளை ஈடுபடுத்துவதும் இதனால் சாத்தியமாயிற்று (பழையவகை கழுத்துப்பட்டைகள் எருதுகளுக்கு அதிகம் பொருந்தின; ஆனால் அவை குதிரைகளைவிடவும் குறைவான வேகத்தில்தான் வேலை செய்தன). மேலும், கடந்த காலத்தில் கிடைமட்ட கோட்டில் நுகத்தடி பூட்டப்பட்ட குதிரைகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக செல்லும்படி இணைக்கப்பட முடிந்ததால் அவற்றின் இழுப்புவிசையும் கணிசமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் உழும்முறைகளும் மாறின. கலப்பைக்கு இரண்டு வெட்டு வாய்கள் இருந்தன. - ஒன்று நிலத்தை பிளப்பதற்கும், மற்றொன்று மண்ணைப் புரட்டிப் போடவும். இந்த `எந்திரம்' நார்டிக் மக்களுக்கு (ஸ்கோன்டிநேவியர்கள்) கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தெரிந்திருந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை அது ஐரோப்பா முழுக்க பரவவில்லை.
ஆனால் உண்மையில் நான் பேச விரும்புவது பீன்ஸ் பற்றித்தான்; பீன்ஸ் மட்டுமல்ல, பயறு மற்றும் அவரையைப் பற்றியும்தான். இப்பூமியின் எல்லா பழங்களிலும் தாவர புரோட்டீன் மிக அதிகம் உள்ளது என்பது குறைவாக இறைச்சி சாப்பிடும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்; அவரை அல்லது உடைத்த பயறு பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த உணவு வகை, திண்மையான, சுவையான ஒரு இறைச்சிக் கண்டத்துக்கு இணையான சத்து உடையது என்று ஊட்டச் சத்து வல்லுநர் வலியுறுத்திச் சொல்வார். நெடுங்காலத்தக்கு முந்திய அந்த இடைநிலைக் காலங்களில் ஏihகள் அவர்களே கோழிகளை வளர்த்தாலொழிய - அல்லது திருட்டுத்தனமாக விலங்குகளை வேட்டையாடினாலொழிய - இறைச்சி சாப்பிட முடியாது (காடுகளில் வேட்டையாடுதல் பிரபுக்களின் தனி உரிமையாக இருந்தது) நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த சத்துக்குறைவான உணவு, ஊட்டமில்லாத, மெலிந்த, சோகை படிந்த, குள்ளமான, வயல்களைப் பராமரிக்க இயலாத ஒரு மக்கள் திரளை உண்டாக்கியது. எனவே பத்தாம் நூற்றாண்டில் பயறுவகைகளின் சாகுபடி பரவத் தொடங்கியபோது ஐரோப்பாவின் மீது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைக்கும் மக்களால் அதிக புரோட்டீனை உண்ண முடிந்தது; அதன் விளைவாக அவர்கள் அதிக உடலுரம் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்து, அதிகக் குழந்தைகளைப் பெற்று ஒரு கண்டத்தின் மக்கள் தொகையை மறுபெருக்கம் செய்தார்கள்.
நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புக்கள் சிக்கலான எந்திரங்களைச் சார்ந்துள்ளன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் - அதாவது ஐரோப்பியர்களாகிய நாம், அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய மதகுருக்களின் வழித்தோன்றல்கள், மற்றும் ஸ்பானிய வெற்றியாளர்கள் - இன்னும் இங்கிருப்பதற்குக் காரணம் பீன்ஸ்தான். அவை இல்லாவிட்டால் ஐரோப்பிய மக்கள் தொகை சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே இரண்டு மடங்கு ஆகியிருக்காது. பல லட்சக்கணக்கானவர்களாக எண்ணிக்கையில் இன்று நாம் இருக்க மாட்டோம். நம்மில் சிலர், இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களையும் உள்ளிட்டு, வாழ்ந்திருக்க மாட்டோம். சில தத்துவ வாதிகள் மக்கள் தொகை பெருகாமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனறு சொல்கிறார்கள். ஆனால் எல்லாரும் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஐரோப்பியர் அல்லாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? மற்ற கண்டங்களின் பீன்ஸ் வரலாறு எனக்கு பரிச்சயமில்லை. சீனப்பட்டும், இந்திய வாசனைத் திரவியங்களும் இல்லாமலிருந்திருந்தால் ஐரோப்பாவின் வணிக வரலாறு வேறுமாதிரி ஆகியிருக்கும் என்பதைப் போல மற்ற கண்டங்களின் வரலாறும் ஐரோப்பிய பீன்ஸ் இல்லாமலிருந்திருந்தால் மாறியிருக்கும் என்பது நிச்சயம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பீன்ஸின் கதை நமக்கு முக்கியத்துவமுடையது என்று எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக, சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் நாம் தீவிர கவனம் கொள்ள வேண்டும் என்று அது சொல்கிறது. இரண்டாவதாக, மேற்கத்திய மக்கள் அரைக்காத அரிசியை உமியோடு சேர்த்து சாப்பிடப் பழகியிருந்தால் நாம் குறைவான அதே சமயம் நல்ல உணவை சாப்பிடுவோம் என்பது நமக்கு நீண்ட காலமாகவே தெரிந்திருக்கிறது.
ஆனால் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாரும் இந்த ஆயிரம் ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று தொலைக்காட்சியையோ அல்லது மைக்ரோ சில்லுவையோதான் சொல்வார்கள். ஆனால் இருண்ட காலத்திலிருந்தும் கூட சிலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.
தமிழில : ஆர். சிவகுமார்.
|
|
|
|
|