ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாம் சரியாக வரலாற்றின் இடைநிலைக்காலத்தில் (ஆனைனடந ஹபநள) இருந்தோம். `இடைநிலைக்காலம்' என்ற பதச்சேர்க்கையே ஒரு கல்வி சார் நடைமுறைதான். உதாரணமாக, சில நாடுகளில் - இத்தாலியை உள்ளிட்டு - தாந்தே மற்றும் பெட்ராக் ஆகியோரின் காலத்தைக் குறிப்பிடும்போது கூட `இடைநிலைக் காலம்' என்ற சொற்றொடரை ஒரு எழுத்தாளர் பயன்படுத்துகிறார். பிற நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் இக்காலத்தை மறு மலர்ச்சிக்காலம் என்று குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க குறைந்தது இரண்டு `இடைநிலைக்காலங்கள்' இருப்பதாக நாம் சொல்லலாம் : ரோமப் பேரரசின் வீழ்ச்சி (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு)யில் தொடங்கி கி.பி. 999 வரை ஒன்று; கி.பி. 1000ல் தொடங்கி குறைந்தது 15-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது மற்றொன்று.
கி.பி. ஆயிரமாவது வருடத்துக்கு முந்தைய இடைநிலைக் காலத்தை இருண்ட காலம் என்று பொருத்தமாக அழைக்கலாம்; இப்பதம், ஐந்திலிருந்து பதினான்கு வரையிலான எல்லா நூற்றாண்டுகளையும் குறிப்பதற்காகக் கவனமின்றிப் பயன்படுத்தப்படுகிறது. `பொருத்தமாக' என்று நான் சொல்வது அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல மனித எரியூட்டல்களினால் அல்ல; ஏனென்றால் அதி நாகரிகமான 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளிலும் எரிதழல்களும், சிதைகளும் இருந்தன (கூhந ளுஉயசடநவ டுநவவநசஐ நாம் மறந்துவிடக் கூடாது); அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைகள் பரவலாக இருந்த காரணத்தினாலும் அல்ல; ஏனென்றால், மூடநம்பிக்கைகளைப் பொருத்தவரை - வேறு காரணங்களுக்காக அவை இருந்தாலும் - நம்முடைய புதுயுகம் எந்தக் காலத்துக்கும் சளைத்ததல்ல.
ஐரோப்பாவை பல நூற்றாண்டுகளாக முற்றுகையிட்டு தாக்கி, ரோம நாகரிகத்தைப் படிப்படியாக அழித்த காட்டு மிராண்டிகளின் ஊடுருவல்கள் இக்காலகட்டத்தில் நடந்ததால் அதை இருண்ட காலம் என்று பொருத்தமாக அழைக்கலாம். சீர்குலைந்த நகரங்களைவிட்டு மக்கள் வெளியேறினார்கள்; பெரும் நெடுஞ்சாலைகள் புறக்கணிக்கப்பட்டு, களைமண்டி மறைந்து போயின; சுரங்கம் தோண்டுதல் மற்றும் கல்வெட்டியெடுத்தல் உள்ளிட்ட அடிப்படை தொழில் நுணுக்கங்கள் மறக்கப்பட்டன; பயிர் செய்வது கைவிடப்பட்டது; ஷார்ல மெயினின் (ஊhயசடநஅயபநே) நிலமானிய சீர்திருத்தம் வரும் வரை முழு விவசாயப்பகுதிகளும் மீண்டும் வனங்களாயின.
இந்த அர்த்தத்தில் கி.பி. 1000 க்கு முந்தைய இடைநிலைக் காலம் வறுமை, பசி, பாதுகாப்பின்மை ஆகியவற்றின் காலமாக இருந்தது. இடைநிலைக் காலத்தின் அன்றாட வாழ்க்கை விவரங்களை நுணுக்கமாகப் பதிவு செய்த துயஉளூரநள டுந ழுடிகக என்பவர் தன்னுடைய `இடைநிலைக்கால மேற்கின் (ஐரோப்பாவின்) நாகரிகம்' என்ற புத்தகத்தில் மிகப் பிரபலமான கதைகள் மூலம் அக்காலம் எந்த அளவு வறுமையுற்றிருந்தது என்பதை விவரிக்கிறார். அப்படிப்பட்ட கதை ஒன்றில், ஒரு விவசாயி தவறுதலாகக் கிணற்றுக்குள் போட்டுவிட்ட அரிவாள் ஒன்றை மீட்டெடுக்க ஒரு ஞானி மாயமாகத் தோன்றுகிறார். இரும்பு அரிதாகிவிட்ட சகாப்தத்தில் ஓர் அரிவாளின் இழப்பு பயங்கரமானதாக இருந்திருக்கும்; விவசாயியால் அறுவடையைத் தொடர்ந்திருக்க முடியாது; அரிவாளின் கூர்ப்பகுதி ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்
|