விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விவேகானந்தரின் கடவுளைத் தேடி என்ற கவிதை உங்களுக்காக... 1. கடவுளைத் தேடி மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே, கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே,கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்திமிகு மறைகளிலே,சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலேஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப்போல்யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன்!பேரன்பே! என் இறைவா! பிறிதெங்கு சென்றாய் நீ?எழுந்துவந்த எதிரொலியோ இயம்பியது சென்றதென,இரவினிலும் பகலினிலும் எத்தனையோ ஆண்டுகளாய்அரியவொரு சுடர் என்றன் அறிவில் நிலவியது!எப்பொழுது பகல்மாறி இரவுற்றதென அறியேன்,செப்பமுள் நூலறுந்து சிதைந்ததுபோல் இருந்ததுளம்;பொங்குமொளி வெய்யிலிலும் பொழியும் மழைதனிலும்கங்கைக் கரையதனில் கால்நீட்டி நான்படுத்தேன்;எரிகின்ற கண்ணீரால் எழுந்த துகள் நான் அடக்கிஅழுதோலம் இட்டேன்யான் ஆர்ப்பரிக்கும் கங்கையுடன்இருக்கும் நிலம் யாவும் எச்சமயக் கோட்பாடும்உரைக்கும் பெயர்களினால் உனைக்கூவி நான் அழைத்தேன்,உயர்ந்தவர்கள் குறிக்கோளை உற்ற வழியதனைத்தயவோடு நீ எனக்குச் சற்றே தெரியவுரை!என்றன் அலறலுக்கும் ஏங்கொலிக்கும் மத்தியிலேநின்றொருவன் எனைக்கூவும் நிலைதெரியும் நாள்வரையில்கணங்கள் யுகங்களெனக் காட்சிதர, துன்பத்தின்உணர்வு பெரிதலற ஓடியன பல்லாண்டு.` என் மகனே, என் மகனே' என்று மிக மேலானமென்மைக் குரல் எழுந்து வேதனையை ஆற்றியது,என்றனுயிர் நரம்பெல்லாம் இணைந்திசைக்கும் இசையதனில்நன்றுவரும் சிலிர்ப்பாக நற்காட்சி தந்தது!எந்த இடத்திருந்து எழுந்ததந்தக் குரல் என்றுகண்டு கொளமுயன்று கால்ஊன்றி நான் நின்றேன்.எனைச்சுற்றி, என் முன்னே, என் பின்னே அதைக்காணமுனைப்போடு நான்நோக்கி முயன்றுமிகத் தேடி நின்றேன்.மறுபடியும் மறுபடியும் மாண்புடய குரலதுவோஉரையாடி நின்றதுபோல் உளத்தினிலே தோன்றியது.ஆனந்த வெள்ளத்தில் ஆன்மா அமைதியுற்றுமோனப் பரவசத்தில் முற்றும் மயங்கியது.மின்னலொன்று, ஆன்மாவில் மிக்கஒளி சேர்த்தது காண்.என்னிதய உள்ளுக்குள் எழிற்கதவம் திறந்ததுகாண்.இன்பமே! பெருமகிழ்வே! எதனை நான் காண்கின்றேன்! |