இலங்கையில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி நமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கவிதை வரிகள் இதோ,இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம்இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில்உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத்தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும்வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல் -இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்துஇனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டுஇங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை" இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டுஅவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கிஅங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டுசர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம் -அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும்அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்அதனால் நிதி கொடுக்காதீர் - இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்றுவெறிக் கூச்சல் போடுகின்றார் - அவற்றை நாம் பொருட்படுத்தாமல்வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாகவெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்குஇதயத்தைத் தந்திடுவோம் - தேவையெனில்இன்னுயிரையும் வழங்கிடுவோம்!இவ்வாறு அந்த கவிதையில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். |
தேடல் தொடர்பான தகவல்கள் |