நவீன விருட்சம் என்ற சிற்றிதழில் வெளியான விக்ரமாதித்யனின் கவிதையை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்காக இங்கு வெளியிட்டுள்ளோம்.
கனவுப் பாதையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும் அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும் அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய் இருந்தால் என்ன
ஏதோ ஓர் அழிவுப் பாதை
நீண்ட நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய் நீளும் பாதை
எப்பொழுது வந்து சேரும் அத்தம்
இப்பொழுது இருப்பது எந்த இடம்.
(நன்றி: நவீன விருட்சம், அக்- டிச. 2000)
|