கவிதைகள்: ச. விசயலட்சுமி
[கவிஞர் ச.விசயலட்சுமி தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர். முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர். "பெருவெளிப்பெண்" கவிதைத் தொகுதி இவரது முதல் தொகுதி. இந்த தொகுதியிலிருந்து சில கவிதைகளை வழங்குகிறோம்]
தீபாராதனை
உடல் சோர்வு உணர்வை அழுத்த
மனசு சுத்தமாயிருந்தால் நாளும் கிழமையுமாய் உட்காருவியா இப்படி...! மூலையில் முடங்கு
தீவிரமானது தீண்டாமை வயிற்றில் முற்றிய வலி வயிற்றுக்குத் தேவையில்லை மருத்துவம் ஆதரவாய் ஒரு பார்வை இல்லை
தோரணமும் அபிஷேகமும் அறுசுவை உண்டியோடு தீபாராதனை எரிகிறது மனமும்
நன்றி: "பெருவெளிப்பெண்" ஆசிரியர்: ச.விசயலட்சுமி வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்
|