அழுக்கின் சுயம்
ஒவ்வொரு மூலையிலும் வீடு இறைந்து கிடக்கிறது துணிக்குவியலாய்.
ஒவ்வொரு துணியிலும் அவரவருக்கான பிரத்யேக வாசனை ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எடுக்க எடுக்க மலைக்காமல் வளர்கிறது துணிகளின் மலை
மடித்து மடித்து களைத்துப் போய் ஒவ்வொரு குவியலிலும் அழுக்காய்ப் படர்த்துகிறேன் என் சோம்பலின் சுய ரூபத்தை
மணங்களின் கலவையினூடே முகரவியலா நறுமணத்துடன் உயர்ந்து வளர்கிறது என் சுயத்தின் விஸ்வரூபம்
|