முத்துக்குமாரின் மனக்குன்றின் மேல் என்ற கவிதை
மனக் குன்றின் மேல் ஆதரவற்று தூக்கியெறியப்பட்டேன்;
எல்லாமே சிறிதாக, சிறிது சிறிதாக தூரத்தே விலகின.
வார்த்தை மைதானங்கள் உணர்வுகள், பயங்கள், வெட்கங்கள், கோபங்கள் ஆசைகள் ஆகிய ஒண்டுக் குடித்தனங்கள் அனைத்துமே சிறிதாக... சிறிது சிறிதாக...
கைகளின் கீழ் கல்தரை; இங்கும் ஏதேனும் முளைக்கலாம்;
மலயோரத்தில் தெரியாத தாவரம் காற்றைத் தாலாட்டுவதாய் விவரமறியா இறுமாப்புடன் பரட்டைத் தலையாட்டுகிறது
உறுதியான கால்களுடன் மிருகங்கள் சில அருகே உலாத்துகின்றன;
அடைக்கலம் தேடி உட்புகுந்த மகா பறவைகள் குன்றைவிட்டுச் சென்று குன்றை நோக்கி எக்காளமிட்டுச் சிரித்தன;
புகலிடமின்றி மன மலையின் முகட்டில்... நான்?
|