இடிபாடுகள் புதுப்பித்து கட்டிடம் கட்டி ஆவிகள் ஊளையிடும் நகரில் மனிதர்களை குடியேற்ற அல்ல பேச்சு;
பயம் உறைந்த ரத்தமாய் உடல்கள்;
எழுந்தது பார் நவ சகாப்தம்! பெரு வயிறு, பெருந்தீனி, பிணந்தின்னி வியாபாரியின் பேச்சில் மறைகிறது இடுபாடுகளுக்கடியில் கைத்தட்டி கால்பந்து ரசித்து, ஒயின் குடிக்கும் குடும்பம்;
உன்னத வாழ்வு, சீரமைந்த வாழ்வு குறித்து பிழைத்தவர்க்ள் யோசிக்க இறந்த சதைகள் என்னவோ கோபுரங்களாய் குவிகிறது மறு உலகம் நோக்கி.
முதல் ஆட்டம் என்று துவங்கி இறுதி ஆட்டம் ஆடும் பேயரசுகாள்! இப்போதே பிடியுங்கள் உங்கள் இடத்தை இடுகாட்டில்.
|