முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
என் கல்லறை வாசகம் - கவிஞர் லட்சுமி
Webdunia
நான் பிறந்த போது மரண வேதனை
அனுபவித்ததாய் என் தாய் சொன்னால்
ஆனால் என் தாய்க்கு நான் கொடுத்த
வலியை இன்று நான் உன்னிடத்தில்
இருந்து பெற்றுக் கொண்டேனடி

உன் விழி என்னும் உளி எடுத்து
என்னை
காதல் சிற்பமாக செதுக்கி விட்டாய்
செதுக்கிய சிற்பத்தை இன்று அதே
உளியால் உடைத்துக் கொள்கிறாய் நியாயமா
மணவறையில் உன் மணாளனாய் அமர நினைத்தேன்
மணமகளாய் நீ
ஆனால்
மணாளனாய் இன்று வேறு யாரோ
உன்
மணவறையில் எனக்கு இடம் இல்லை என்றதும்
கல்லறை எனக்கு இடம் கொடுக்கப் போகிறது
எனவே
என் கல்லறைக்கு நானே வாசகத்தினை
பதிவு செய்து விட்டேன் உன்னை நினைத்து
இறக்கும் போது மரணமும் எனக்கு
மாலையிடுகிறது.
மேலும்
இயற்கை நீயதி - கவிஞர் லட்சுமி
மாணவன்
பாலைவனத்தில் விதை வைத்தவன்
நட்பு - கவிஞர் லட்சுமி
மனிதன் -கவிஞர் லட்சுமி
காதல் - கவிஞர் லட்சுமி