முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில்
Among the School Children - W.B.Yeats
Webdunia

தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ்

செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே
சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே;
வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி
விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள்
மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல்
மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்``
எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில்
எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்!

காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர்
காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல்
ராணியினை. தாழும் தீக் கணகணப்பில்,
ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி
வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம்
விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்!
ஊன்கலந்தோம்! உயிர்கலந்தோம்! ஒரே ஓர் ஓட்டின்
உள்ளிருக்கும் வெண் மஞ்சள் கருவே ஆனோம்!

அன்றெனக்கு அவள் சொன்ன சோக, கோப
ஆவேச நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டே
முன்நிற்கும் சிறுமிகளை ஒவ்வொன்றாக
முனைந்து முகம் நோக்குகின்றேன். அவளும் ஓர்கால்
சின்னதிலே இவர்போல்தான் இருந்திட்டாளோ!-
(தெய்வீகக் குழந்தைக்கும் மானுடத்தின்
பண்பு சில இருக்கலாமே.) அந்தோ! விந்தை!
பாழுமனம் வெறியேற அவளே:! மெய்யாய்!

அவளுடைய இன்றை உரு அகம் அலைத்து
அலைகளிடை வீனெஸென உதிக்கும்! ஈதோ
குவாற்றசென்ட்டோ, நிழல் சாதத்தையும் காற்றுக்
குளிகையையும் அருந்தியதைப் போல் குழிந்தும்
கவின் பொதிந்த கதுப்பினாளைச் சித்தரிக்க
கைத்திறமும்? வாலிபத்தில் நானும் வீனஸ் தவப்புதல்வன் போல அழகன் இல்லை, ஆனால் தற்பொழுது போல் கொல்லைப் பொம்மை இல்லை.

எந்த இளம் அனன்னைதான் அறுபதுக்கும்
எஞ்சும் பனிப்பருவங்கள் தலைசுமக்கும்
மைந்தனது விகாரஉரு முன்னே நோக்கின்,
மடிவீழ்ந்து மடுஆழ்ந்து மடைதிறந்து
இந்திரியத் தேன்துளிர்த்து விலகி விட்டோன்
இதயமில்லாத் துரோகத்தை ஈடாய் ஏற்பாள்,
ஐந்திரண்டு மாதங்கள் ஏந்தி, ஈன்று
அல்பகலாய்ப் புறம்தந்த வேதனைக்கு?
1| 2
மேலும்
மரத்தை மறைப்பது
மரம்போல்வர்
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!
மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழா கவிதை, கட்டுரைப் போட்டிகள்
உலக ஒற்றுமை
வினயமாய்