முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
மரத்தை மறைப்பது
-நோயல் ஜோசப் இருதயராஜ்
Webdunia
மரத்தைப்பார்.
கண்ணாடியைக் கழற்று,
பீழையைத் தூசியை அகற்று,
மரத்தைப் பார்.
மரத்தை மனமாகவோ மனத்தை மரமாகவோ
அல்ல,
மரத்தை மரமாகவே.
விஞ்ஞானி வியாபாரியாக அல்ல,
மரத்தை மரமாகவே
மரத்தை மரம் பார்த்தாற்போல்,
மரத்தை மரத்துப்
பார்.
கோவில், காவல் மரங்களாக அல்ல.

`சொல்லாமல் செய்யும் பெரியார் பலா,
சொல்லிச் செய்யும் சிறியர் மா,
சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி` -
அந்த ஒளவையார் மரத்தைப் பார்க்கவில்லை.

பழுமரம் வள்ளலாம
நெடுமரம் முட்டாளாம்.
தனிமரம் துறவியாம்.
கூட்டுமரம் வம்சமாம்.
தேக்கு, சந்தனம், மூங்கில்
வல்லவன், தியாகி, சந்தர்ப்பவாதியாம்.
மரத்தில் மானுடத்தின் இலக்கியத்தைப்
பார்ப்பது பார்ப்பதே அல்ல
மரமை, மரத்துவம்
பா - மரத்தில் இல்லை,
பாமரத்தோடு பார்ப்பதில்தான்.
மறதி
அறிமடமை
காட்சி
மரம்.
மேலும்
மரம்போல்வர்
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!
மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழா கவிதை, கட்டுரைப் போட்டிகள்
உலக ஒற்றுமை
வினயமாய்
புதிய இசையின் பதற்றம்