முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
வெறுமை
Webdunia
சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும்
இறங்குகிறது வெறுமையான இரவு.

காத்திருப்பவை நாய்களின் குரைப்பும்
சோற்றின் மௌனமும்.

ஏதொ மறந்து போய்விட்டது
யாருடைய களைத்த முகமும்
உன்னைத் தேடுவதில்லை.

இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு.

இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை
என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள்
என் பின் இருப்பவை துகள்கள்.

கதியில் மறைந்தது சிரிப்பு ஏன்
அழுகையாகக்கூட இருக்கலாம்.

இப்பொழுதுதான் இங்கு
எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல்

கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை
அசைத்து போகிறாள் ஒரு பெண்

உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன்
நீல மேகங்களிடை

மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்டும்
ஏதோ ஒன்றை அடைந்த திருப்தியில் பிரிந்தான் அவன்

இன்று கால்களுக்குக் கீழ் எந்தத்தரையும் இல்லை
ஒருவேளை நீ காத்திருப்பது மிக அதீதமான கனவு
யாருடைய கனவென்றும் தெரியவில்லை
ஆதாரம் - கவிதை: எம்.கண்ணன்
மேலும்
கடிகாரமுள்ளாய்
மிதக்கும் கேள்வி
மிதக்கும் கேள்வி
செடியின் துயரம்
மூன்று கற்கள்
பத்திரிகை