முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
கடிகாரமுள்ளாய்
Webdunia
கடிகாரமுள்ளாய் மாறின
கழுகு ஒன்று
நாள் தவறாது வரும்.

அட்டவணை அமைத்துத்
தந்தது யார்?
பசி நேரம் தானா?
வறண்டு போனதா கானகம்?
இறைச்சி கிழிக்க வாய்த்த
அலகால் பருக்கை
பொறுக்கிப் போகிறது
கடிகார முள்ளை
மாறின கழுகு
மேலும்
மிதக்கும் கேள்வி
மிதக்கும் கேள்வி
செடியின் துயரம்
மூன்று கற்கள்
பத்திரிகை
பூக்கள்