முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
மிதக்கும் கேள்வி
Webdunia
கடல்தாண்டிப் பார்த்தவர
கண்களை அனுப்பினேன்
நூற்றாண்டுகள் முன்னால்
பிரிந்துபோன ஒருவனுக்காக
கொதித்துக் கொண்டிருந்தது கடல்
பாய்மரம் அசைய நகரும்
கப்பல்களில் ஒன்றென
விரைந்தன கண்கள்
எப்போதேனும் தண்ணீருக்குமேல்
எம்பிக் குதித்தன மீன்கள்
இரவும் பகலும் அச்சுறுத்தும்
அலைகளின் அமைதி
உயிரைப் பற்றிப் பிழியும்
உப்புக் காற்றின் மௌனகீதம்
விரிந்த கடல் நடுவே
மேற்பரப்பில் கவர்ச்சியின் அசையும்
ஆழ்மடியில் மரணத்தின் நடனமும்
ஏதோ ஒரு பயணநாளின்
இனிய காலையில்
தொங்கவிடப்பட்ட சித்திரமென தென்பட்டது
ஒரு துண்டுத் தீவு
கடல் நடுவே ஒரு கரை
பச்சைப் பசேலென தோப்புகளில்
பாடிய பறவைகள் சிறகடித்தபோது
பரவசத்தில் சிலிர்ந்த கண்களின் விளிம்பில்
வியப்பில் மிதந்தது
நிம்மதியின் உறைவிடம்
கடலா கரையா என்னும் கேள்வி
மேலும்
மிதக்கும் கேள்வி
செடியின் துயரம்
மூன்று கற்கள்
பத்திரிகை
பூக்கள்
கவிதைகள் : ஹம்சத்வனி