முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
பத்திரிகை
Webdunia
என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்கு
ஒரே ஒரு வாய்ப்பு கண்ணாடிதான்
நான் இளமையாய் அழகாய்
இருந்த வரைக்கும் சரி
ஆனால் இப்போது அங்கங்கே நரை
கன்னத்தில் சுருக்கங்கள்
கோபப்படும்போது சிவந்த கண்கள்
இப்போது உன்னைப் பிடிக்கவே இல்லை
அவ்வப்போது என்னைக் குத்திக்காட்டும்
உன் பின்ரசத்தைக் கீறி எடுத்துவிட
வேண்டும் எனப் பதைக்கிறேன்
உன் மேல் உள்ள தூசியைக் காரணம் காட்டி

ஆனால் எனக்குள் தெரிகிறது
எப்போதும் வேண்டும்
முஷ்டியை உயர்த்திப் பிடித்தாற் போண்ற
உன் ஒரு சொல்

மேலும்
பூக்கள்
கவிதைகள் : ஹம்சத்வனி
கவிதைகள் : நாஞ்சில் நாடன்