..என்று கூறுகிறது இந்த நூல். அதாவது தற்போது செலவு செய்யும் தொகைகளுக்கு மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் அதிகமான தொகைகள் கணக்கு புத்தகங்களுக்கு வருவதில்லை என்று இந்த நூல் அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல் வளைகுடாப் போரில் ஈடுபட்ட 7 லட்சம் அமெரிக்க போர் வீரர்களில் 45 விழுக்காடு ஊனமுற்றோர் இழப்பீட்டுத் தொகை கோரியுள்ளனர். இந்த 45 விழுக்காட்டினரில் 88 விழுக்காட்டினருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டுமே ஆண்டொன்றிற்கு 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.
இதுவரை இராக் போருக்கு பலியானதாகக் கூறப்படும் அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 என்றால், இதற்காக கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை தற்போது 28 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்த போருக்காக உண்மையில் செலவிடப்படும் அதிர்ச்சியளிக்கும் தொகை விவரங்களை நிர்வாகம் திறம்பட மறைத்து வருகிறது என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற ஆய்விலிருந்தும் தப்பித்து வருகிறது என்றும் இந்த நூல் கூறுகிறது.
மிகவும் மரபான ஒரு கணக்கீட்டின் படி பார்த்தாலே இராக் போர் ஓரு 3 ட்ரில்லியன் டாலர் போர் என்று கூறும் இந்த நூல் அமெரிக்க பொருளாதாரம் தாங்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நூல் அமெரிக்காவின் எதிர்கால அயலுறவுக் கொள்கைகளை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
|