ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு!
மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்!
ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய!
மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும்
துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்!
தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!
|