எழுத்தை வரையும் பேனா போற்றியேக் காக்க வேணும்! கழுத்தின் அருகில் பிடித்து-எழுத காகிதம் அழகாய் தோணும்.
கவிஞர் நாவல் ஆசான் - நல்ல கருத்தைச் சொல்ல உதவும்! புவியில் மாற்றம் வரவே! - பேனா உண்மை என்றும் கூறும்.
தேர்வில் நன்றாய் எழுத - என்றும் தேவை பேனா ஒன்று! பார்ப்போற்றும் மார்க்ஸும் - அதனால் மூலதனமும் படைத்தார் அன்று!
நண்பர் இரவல் கேட்டால் - அதை நானும் தருவேன் அன்பால்! கண்ணின் மணியைப் போலவே - நான் கருத்தால் காப்பேன் அறிவால்!
வாரம் ஒரு நாள் பேனாவும் - சுத்தம் ஆகி விடுமே தவறாமல்! யாரும் உதவி கேட்டாலும்- மனம் மகிழ்வாய் செய்வேன் உதறாமல்.
|