நோய்க்கணிப்பு :
டிஸ்லெக்சியா இருப்பதை அறிய ஒரே ஒரு பரிசோதனை முறை எதுவுமில்லை. உங்கள் மருத்துவர் குழந்தைகளின் புலன் உணர்வு திறன், அறி திறன், கல்வி மற்றும் மனோவியல் காரணிகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்வார். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி விதம், மருத்துவ வரலாறு, உங்கள் குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் கேட்டறியலாம்.
கீழ் வரும் பரிசோதனைகளையும் செய்யுமாறு கூறலாம் :
பார்வை, கேட்கும் திறன் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் : ஏனெனில் உடலின் பல்வேறு பகுதியில் உள்ள பிரச்சனையால் டிஸ்லெக்சியா ஏற்பட்டுள்ளதை அறிய இந்த பரிசோதனை அவசியம்.
மனோவியல் மதிப்பீடு : சமூக, குடும்பப் பிரச்சனைகள், கவலை, பயம், மன அழுத்தம் இதனால் டிஸ்லெக்சியா எற்பட்டுள்ளதா என்பதை அறிய இது உதவும்.
கல்வித் திறன் குறித்த மதிப்பீடு : ஒரு நிபுணரை வைத்து உங்கள் குழந்தைகளின் வாசிப்பு எழுத்து புரிதல் திறனை பரிசோதனை செய்யலாம்.
சிகிச்சை :
டிஸ்லெக்சியாவிற்கு காரணமான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியை சரிசெய்யும் சிகிச்சை எதுவும் இல்லை. கல்வி போதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்வதன் மூலமும், மனோவியல் பரிசோதனை மூலம் குழந்தையின் இந்த பிரச்சனை குறித்து ஆசிரியரிடம் தெரிவித்து அதற்கு தக்கவாறு அந்த குழந்தையிடம் மட்டும் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளுமாறும், பாடம் புகட்டும் முறைகளில் மாற்றங்களை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளலாம்.
உதாரணமாக, புத்தகத்தில் உள்ள பாடங்களை ஒருவர் வாயால் படித்து அதற்குத் தக்கவாறு புத்தகத்தில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி பயிற்றுவிக்கலாம். இக்குழந்தைகளின் அனைத்து புலன் உணர்வுகளும் உணருமாறு பாடம் புகட்டல் அணுகுமுறைகளை இந்த துறையில் நிபுணர்களானவர்கள் செய்வார்கள்.
அனைத்திற்கும் மேலாக பெற்றோர்கள் இக்குழந்தைகளிடம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் விரைவில் படிக்கத் தொடங்கிவிடுவாய் என்றும் உணர்வு பூர்வமான ஆதரவு அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் தவிர பிற கதைப் புத்தகத்தை வாசித்துக் காட்டி அதில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி மெதுவாக எழுத்துக்கு தயார்படுத்தி வந்தால் இது நாளடைவில் குணமாகும் மிகச் சாதரணமான ஒரு நிலையே.
|