முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > பொது அறிவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌ல்‌வி க‌ற்கு‌ம் ‌திறனை கையெழு‌த்து அ‌திக‌ரி‌க்‌கிறது!
webdunia photoFILE
எழுதுவதை த‌ட்ட‌ச்சுப் பலகை எ‌ளிமையா‌க்‌கியு‌ள்ளது. ஆனாலு‌ம் தொ‌ன்று‌ தொ‌ட்டு நா‌ம் க‌ல்‌வி க‌ற்பத‌ற்கு‌ம், ந‌ம்முடைய எ‌ண்ண‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்தவு‌ம் பய‌ன்படு‌த்‌தி வரு‌ம் கையா‌ல் எழுது‌ம் முறை இ‌‌ன்றளவு‌ம் மு‌க்‌கிய ப‌ணியா‌ற்‌றி வருவதாக வா‌ண்ட‌ர்‌பி‌ல்‌ட் கையெழு‌த்து வ‌ல்லுந‌ர் ‌ஸ்டீ‌வ் ‌கிரஹா‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ந‌ன்றாக எழுதுவத‌ற்கு‌ம், க‌ல்‌வி க‌ற்பத‌ற்கு‌மான அடி‌ப்படையான நடைமுறைக‌ளி‌ல் கையெழு‌த்து இ‌‌ன்‌றியமையாததாக ‌விள‌ங்‌கிவருவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இள‌ம் வயது குழ‌ந்தைக‌ள் இ‌ந்த‌க் கலை‌யி‌ல் ‌திறமை‌மி‌க்கவ‌ர்களாக உருவாகாம‌ல் போவத‌ற்கு காரண‌ம் எழுதுவதை த‌வி‌ர்‌ப்பதுதா‌ன் எ‌ன்று‌ம், இ‌ந்த‌ப் பழ‌க்க‌ம் அவ‌ர்களை ந‌ல்ல எழு‌த்து‌த் ‌திற‌ன் உ‌ள்ளவ‌ர்களாக உருவாவதை‌த் தடு‌ப்பதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மேலு‌ம் வகு‌ப்பறைக‌ளி‌ல் குழ‌ந்தைக‌ள் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் பாட‌ம் நட‌த்து‌ம் போது கு‌றி‌ப்பெடு‌ப்ப‌திலு‌ம், பாட‌த்தை தொட‌ர்‌ந்து கவ‌னி‌ப்ப‌திலு‌ம் ‌பிர‌ச்சனையை எ‌தி‌ர்கொ‌ள்ள‌ச் செ‌ய்வதாகவு‌ம் வா‌ண்ட‌ர்‌பி‌‌ல்‌ர் ‌பிஃயாபாடி க‌ல்லூ‌ரி ‌சிற‌ப்பு‌க் க‌ல்‌‌வி பேரா‌சி‌ரிய‌ர் ‌ஸ்டீ‌வ் ‌கிரஹா‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

குழ‌ந்தைகளு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் எ‌வ்வாறு எழுத வே‌ண்டு‌ம் எ‌ன்பதை தொட‌ர்‌ந்து அ‌றிவுறு‌த்துவத‌ன் மூல‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பாட‌த்‌தி‌ட்ட‌ங்க‌ள் அனை‌த்‌திலு‌ம் க‌ல்‌விக‌ற்கு‌ம் ‌திறனை ஒ‌ட்டுமொ‌த்தமாக அ‌திக‌ரி‌க்க இயலு‌ம் எ‌ன்று‌ம் ‌கிரகா‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். மேலு‌ம் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் மாணவ‌ர்களு‌க்கு எழு‌த்து‌க்களை எ‌ப்படி ச‌ரியாக எழுதுவது, ஒரு எழு‌த்தை ம‌ற்றொரு எழு‌த்துட‌ன் இணை‌த்து எழுதுவது எ‌வ்வாறு எ‌ன்பதை தொட‌ர்‌ந்து மாணவ‌ர்க‌ள் பு‌ரி‌ந்து கொள்ளு‌ம் வரை ப‌யி‌ற்று‌வி‌க்க வே‌ண்டு‌ம் எனவு‌‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இ‌ந்த‌ வகையான ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் கட‌ந்த 1950 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல் ப‌ள்‌ளிக‌ளி‌ல் நாளொ‌ன்று‌க்கு 2 ம‌ணி நேர‌ம் அளவு‌க்கு ப‌யி‌ற்‌சி அ‌ளி‌த்த ‌நிலை மா‌றி த‌ற்போது 10 ‌நி‌மிட‌ங்களு‌க்கு‌ம் குறைவான காலமே சொ‌ல்‌லி‌க் கொடு‌ப்பதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். எழு‌துவ‌தி‌ல் ‌பிர‌ச்சனையை ச‌ந்‌தி‌க்கு‌ம் மாணவ‌ர்களு‌க்கு ந‌ல்ல எழு‌த்து‌ப் ப‌யி‌ற்‌சி அ‌‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அதே‌ப்போல எழு‌த்து‌ப் ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்கு‌ம் போது ந‌ன்றாக எழுதுவ‌தி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌விளைவுக‌ள், வா‌ர்‌த்தைக‌ளி‌ன் எழு‌த்து‌க்களை பய‌ன்படு‌த்துவதையு‌ம் சொ‌ல்‌லி‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌‌‌ஸ்டீ‌வ் ‌கிரஹா‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக எழுதுவத‌ற்கு எ‌வ்வாறு உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பது தொட‌ர்பாக பெ‌ற்றோரு‌க்கு ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். ‌‌ஸ்டீ‌வ் ‌கிரஹா‌ம் கையெழு‌த்து தொட‌ர்பாக ஏராளமான பு‌த்தக‌ங்களை எழு‌தியு‌ள்ளா‌ர். மேலு‌ம் கையெழு‌த்து, எழு‌த்து‌ப் ப‌யி‌ற்‌சி, க‌ல்‌வி க‌ற்ற‌லி‌ல் உ‌ள்ள இடையூறுக‌ள் தொட‌ர்பாக 135 -‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஆரா‌ய்‌ச்‌சி‌க் க‌ட்டுரைகளை சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
செல்போனைக் கண்டுபிடித்தவர்
குழந்தைகள் திறன் அதிகரிக்க பொறுமை அவசியம்!
செ‌ஸ் ‌விளையா‌‌ட்டு குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ண்பை மே‌ம்படு‌த்து‌ம் : ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
அ‌திக உ‌ப்பு சா‌ப்‌பிடு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு இர‌த்த அழு‌த்த‌ம் ஏ‌ற்படு‌ம் : ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் மூளை ‌சி‌‌றியதா?
தலைவர்கள் பிறந்த நாள்