முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > பொது அறிவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சிசு மரண‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌‌திக‌ம் : யூ‌னிசெஃ‌ப்!
ஊ‌ட்டச‌த்து குறைவான குழ‌ந்தைக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள மா‌நில‌ங்க‌ள் ம‌த்‌திய ‌பிரதேச‌ம், ஜா‌ர்‌க்க‌ண்‌ட், ‌பீகா‌ர், குஜரா‌த், ஒ‌ரி‌ஸ்ஸா, ச‌த்‌தீ‌ஸ்க‌ர், உ‌த்‌திர‌பிரதேச‌ம், மேகாலயா ஆகு‌ம். உல‌கிலேயே 5 வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட அ‌திகமான குழ‌ந்தைகளை, அதாவது 94 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளை இ‌ந்‌‌தியா கொ‌ண்டு‌ள்ளது. இதுவரை அ‌க்குழ‌ந்தைகளு‌க்கு தடு‌ப்பு மரு‌ந்து வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அ‌தி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த 80 ம‌ற்று‌ம் 90 -‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல் தடு‌ப்பு மரு‌ந்து வழ‌ங்கு‌ம் நடவடி‌க்கைக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றதாக யூ‌னிசெ‌ப் அலுவல‌ர் ‌கியா‌னி மு‌ர்‌ஸி கூ‌றினா‌ர். ஆனா‌ல் ‌அத‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌‌ர் இ‌தி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

மிகவு‌ம் ‌பி‌ன்த‌ங்‌கிய மா‌‌நில‌ங்களான ‌பிகா‌ர், ம‌த்‌திய‌பிரதேச‌ம், ,ராஜ‌ஸ்தா‌ன் ஆ‌கிய மா‌நில‌ங்க‌ள் நோ‌ய் தடு‌ப்பு முகா‌ம்களை‌ச் ‌சிற‌ப்பாக செய‌ல் படு‌த்‌திய ‌நிலை‌யி‌ல்,வள‌ர்‌ச்‌சியடை‌ந்த மா‌நில‌ங்களான குஜரா‌த், மகாரா‌ஷ்டிர‌ம் ஆ‌கியவை முறையாக நடைமுறை‌ப் படு‌த்தாததே ஒ‌ட்டுமொ‌த்த ச‌ரிவு‌க்கு காரண‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த அலுவல‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தடு‌ப்பு மரு‌ந்து வழ‌ங்கு‌ம் முகா‌ம்களை வலுவா‌க்‌கி, குழ‌ந்தைகளு‌க்கு தடு‌ப்பு மரு‌ந்துகளை உடனடியாக செலு‌த்த நடவடி‌க்கை மே‌ற்கொ‌‌ள்ள வே‌ண்டு‌ம். இ‌ந்த மரு‌ந்துக‌ள் ம‌த்‌திய அர‌சிட‌மிரு‌ந்து மா‌நில அரசுக‌ள் மூலமாக எடு‌த்து‌‌ச் செ‌ல்ல‌ப்படு‌ம் போது‌ம், மரு‌ந்துகளை‌உ‌ரிய வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் பாதுகா‌ப்புட‌ன் எடு‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம். நாடுமுழுவது‌ம் உ‌ள்ள சுகாதார‌ப் ப‌ணியாள‌ர்களு‌க்கு முறையான ப‌யி‌ற்‌சியு‌ம் அ‌ளி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எனவு‌ம் அ‌ந்த அலுவல‌ர் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

குழ‌ந்தைக‌‌ள் வா‌‌ழ்வத‌ற்கு சுகாதாரமான குடி‌நீ‌ர் அவ‌‌‌சிய‌ம்,‌புத்தாயிரம் ஆண்டு இல‌க்குக‌ளி‌ல் ம‌ற்றொ‌ன்றான பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட சுகாதாரமான குடி‌நீரை வழ‌ங்க உலக நாடுக‌ள் செய‌‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. இ‌ந்‌தியா‌வி‌ல் த‌ற்போது 84‌.5 ‌விழு‌க்காடு ‌கிராம‌‌ப்பற‌ங்களு‌க்கு‌ம், 95 ‌‌விழு‌க்காடு நக‌ர்புற‌ங்களு‌க்கு‌ம் பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட குடி‌‌நீ‌‌ர் வச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌புத்தாயிரம் ஆண்டு இல‌க்கை அடைய இ‌ந்‌தியா வேகமாக செய‌ல்ப‌ட்டு வருவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா எடு‌த்து வரு‌ம் நடவடி‌க்கைகளை பாரா‌ட்டியு‌ள்ள யூ‌னிசெஃ‌ப் உல‌கி‌ன் ‌மிக‌ப் பெ‌ரிய ம‌க்க‌‌ட் தொகையை‌க் கொ‌ண்டு‌ள்ள இ‌ந்‌‌தியா புத்தாயிரம் ஆண்டு இல‌க்கை எ‌ட்டுவ‌தி‌ல் மு‌க்‌கிய கார‌ணி எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஐ‌ந்து வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட உலக குழ‌ந்தைக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை இ‌ந்‌தியா‌வி‌ல் 20 ‌விழு‌க்காடாக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், உலக நாடுக‌ளி‌ன் ஒ‌த்துழை‌ப்பு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு 20 ‌விழு‌க்காடு ‌‌கிடை‌‌க்க வே‌ண்டு‌ம். அது ‌‌கிடை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது இ‌ந்‌தியாவு‌க்கு எ‌ன்று யூ‌னிசெஃ‌‌ப்‌பி‌ன் இ‌ந்‌‌திய ‌பிர‌தி‌நி‌தி ‌கியா‌னி மு‌ர்‌ஸி கூ‌றியு‌ள்ளா‌ர்.
 << 1 | 2   
மேலும்
வள‌ர்‌ப்பு நா‌ய்களு‌க்கு சா‌க்லே‌ட் ஆப‌த்து!
அ‌திக நேர‌ம் தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு...
நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌‌பிடுவ‌தி‌‌ல் பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளு‌க்கு முத‌லிட‌ம்!
பசு‌ம்பா‌ல் குடி‌த்தா‌ல் அ‌றிவு வளரு‌ம்!
குழ‌ந்தைக‌ளி‌ன் ‌திறமையை வெ‌ளி‌க்கொண‌ர்வது பழ‌ங்கால ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களே - ஆ‌ய்வு‌!
குழ‌ந்‌தைக‌ளி‌ன் அசா‌த்‌திய ‌திறமை!