முன்னுரை
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ செல்வானந்தம், கோவை ஸ்ரீ லலிதாம்பாள் அறக்கட்டளை என்னும் ஓர் ஆசிரமத்தில் தங்கி யோகா ஆசிரியராகப் பயிற்சிப் பெற்றார்.
பின்பு தனக்குத் தெரிந்த இந்த யோகக் கலையை ரயில்வே துறையில் பணிபுரியும் அனைத்து ரயில்வே பாதுகாவலர்கள், சமூகசேவை அமைப்பு, ஆந்திர மகளிர் சபா மற்றும் நர்ஸிங் கோர்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
செல்லம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு 2 வருடம் பயிற்சி கொடுத்து சான்றிதழும் அளித்துள்ளார்.
இயற்கை நலவாழ்வு மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் யோகா ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு.
இப்படிப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்துள்ள யோகா ஆசிரியர் ஸ்ரீ செல்வானந்தம், யோகாசனம் இன்னும் பல பேர் கற்று பயன் அடைவதற்காக தற்பொழுது சென்னை சூளைமேடில் ஓம் சாந்தி யோகா மையம் நடத்தி வருகிறார்.
யோகாசனம் எப்படி செய்ய வேண்டும் என்ற முறையையும், யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பற்றி அவர் அளித்த விளக்கமும், புகைப்படங்களுடன் வெப்உலகம் வாசகர்களுக்காக இங்கே அளிக்கப்பட்டுள்ளது. வாரம் இரண்டு யோகாசனங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
|