முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  யோகா
 
யோகாசனங்கள் - ஹத யோகம்
Webdunia
நோய் நொடிகள் அண்டாமல் தடுப்பவையும், அவற்றைத் தீர்த்து வைக்கும் சிகிச்சைத் திறன் கொண்டவையுமான ஆசனங்கள், கிரியைகள் மற்றும் முத்திரைகளைக் கொண்ட யோக முறையே "ஹத யோகம்" எனப்படும். இரத்த இயக்கத்தை உண்டாக்கும் செயலைச் செய்வதுதான் கிரியை என்பது. அதேபோல் உடலின் உள்ளேயுள்ள சுரப்பிகள் சுரப்பு நீரைச் சரிவர சுரக்கும் வகையில் நரம்புகளையும், தசைகளையும் தூண்டிவிடும் ஊக்குவிப்பான்தான் முத்திரை என்பது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் குறிப்பிட்ட ஒரு செயலும், பயனும் இருக்கிறது. அதை ஒரு பயிற்சியாகக் கருதிவிடக் கூடாது. மனம், உடலைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கென்று உள்ள உத்தியாகவே கொள்ள வேண்டும். "எண்பத்து நான்கு கோடி ஆசனங்கள் உள்ளன" என்று சிவபெருமான் "சிவசம்ஹிதை"யில் குறிப்பிடுகிறார். ஆனால் பழைய சமஸ்கிருத நூல்களில் எண்பத்து நான்கு யோக ஆசன நிலைகளே கூறப்பட்டுள்ளன. இவற்றில் சில ஆசனங்கள் எளியவை. சில மிகக் கடினமானவை.

தேகத்தின் எல்லாப் பகுதிகளையும் உறுப்புகளையும் சுத்தம் செய்து அசுத்தங்களை வெளியேறச் செய்யும் 104 நுட்ப முறைகளைக் கொண்ட பல சோதனைகள் ஹத யோகத்தில் அடங்கியுள்ளன. ஷட்கர்மம் எனப்படும் ஆறு பெரிய சுத்தம் செய்யும் செய்முறைகளும் இதில் அடங்கியுள்ளன. ஆகார நியமம், தேகாரோக்கியப் பாதுகாப்பு, மன ஆரோக்கியம் முதலியவை குறித்த கருத்துகளும் ஹத யோகத்தில் இடம் பெற்றுள்ளன.

யோகாசனங்கள்

1. பத்மாசனம்
2. யோகமுத்ரா
3. மத்யாசனம்
4. ஜானுசீர்சாசனம்
5. பஸ்சிமோத்தாசனம்
6. கோமுகாசனம்
7. சர்வாங்காசனம்
8. ஹலாசனம்
9. படகு ஆசனம் (நவ்காசனம்)
10. விபரீத கரணி
11. அர்த்த ஹலாசனம்
12. பவன முக்தாசனம்
13. டோலாசனம்
14. பரிவர்த்த திரிகோணாசனம்
15. வீரியஸ்தம்பன் ஆசனம்
16. உட்கட்டாசனம்
17. பாதஹஸ்தாசனம்
18. புஜங்காசனம்
19. சலபாசனம்
20. தனுராசனம்
21. உஷ்ட்ராசனம்
22. அர்த்தமச்யேந்தராசனம்
23. வஜ்ராசனம்
24. சப்தவஜ்ராசனம்
25. ஏகபாதசீர்சாசனம்
26. சிரசாசனம்
மேலும்
யோகாசனங்கள் எப்படி உருவாயின