முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  டிப்ஸ்
 
உடல் எடை குறையுமோ? உடல் ஆரோக்கியம் தான் குறையுமோ?
Webdunia
மனிதனுக்கு இருந்து வரும் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளில் தற்போது முக்கிய பங்கு வகிப்பது உடல் பருமன் தான். உடல் பருமனானாலும் பிரச்னை, உடல் இளைத்தாலும் பிரச்னை தான்.

உடற்பயிற்சி, இயற்கை உணவு குறைபாடு

உடற்பயிற்சி செய்யாதது தான் இதற்கு முக்கிய காரணம். மாரடைப்பு, இரைப்பை குடல்நோய், புற்றுநோய், பக்கவாதம், சுவாச கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு முதலியவை அளவுக்கு அதிகமான உடல் பருமனால் ஏற்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இயற்கை உணவுகளை குறைத்து பல்வேறு வகையில் துரித உணவுகளுக்கு மக்கள் மாறியதே இதற்கு காரணம் குளிர்பானங்களை குறைக்க வேண்டும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்ததனால் உடல் பருமன் அதிகமாகவும், தைராய்டு அதிகமாக இருந்தால் ஒல்லியாகவும் இருப்பார்கள்.

தேவை உடனடி தீர்வு?

எதிலும் வேகம் என்னும் இக்காலத்தில் உடல் பருமனுக்கான தீர்வும் உடனடியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். டாக்டரிடம் சென்று உடனே எடையை கூட்ட வேண்டும் (or) குறைக்க வேண்டும் என்ன செய்வது? என்று தான் கேட்கிறார்கள். டாக்டர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறி படிப்படியான முன்னேற்றத்தை பெறலாம் என்று அதற்கான வாழ்க்கை முறையை விளக்குகிறார்கள். ஆனால் உடனுக்குடன் தீர்வு வேண்டும் என்று எண்ணும் இவர்கள் வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.

தனியார் உடல் குறைப்பு மையங்கள்

இவர்களின் தேடலை நிறைவேற்றும் விதமாக புற்றீசல் போலப் பெருகி வரும் பல தனியார் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

"உடல் எடையை குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டுமா?உடனே எங்களை அணுகவும். எந்த வித உணவு கட்டுப்பாடோ பத்தியமோ கிடையாது. பக்க விளைவுகளும் வராது! ஒரே மாதத்தில் தீர்வு காணலாம்"

இந்த விளம்பரங்கள் நம் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் தற்போது பரவலாக தென்படுகிறது. ஒரு மாதத்தில் எப்படி முடியும் என்று யாரும் யோசிப்பது கிடையாது. அவர்களுக்கு தேவை அப்போதைய தீர்வு மட்டுமே. இந்த தனியார் சிகிச்சை மையங்களில் பல, எந்த வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில சிகிச்சை மையங்களில் மட்டுமே பக்க விளைவுகள் வராதளவிற்கு இந்திய மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இவை போதாதென்று, மேற்கிந்திய நாடுகளில் உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை முறை பிரபலமாக நடந்து வருவது மெல்ல இந்தியாவையும் தொற்ற ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வளர்ச்சி அறிக்கை தரும் புள்ளி விவரம்

இந்தியாவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை பயன்பாடு அதிகரித்து வருவதாக 1993-ம் ஆண்டே உலக வளர்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. நெய் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதில் யோசிக்க வேண்டிய விஷயம் இந்தியாவில் கிடைக்க கூடிய கொழுப்புகளில் 40% விகிதத்தை 5% மக்களே சாப்பிட்டு விடுவதாக National Nutritional Monitoring Bureau தெரிவித்துள்ளது தான்.

இதற்கு என்ன தான் தீர்வு? உடல் எடையை குறைக்க கூட முடியுமா? மருத்துவர்கள் இந்த மாதிரியான உடனடித் தீர்வு தரும் முறைகளைப் பற்றி என்ன கூறுகின்றனர்?... இந்த கட்டுரையின் நிறைவுப் பகுதியில் காண்போம்.

மேலும்
முதுகுவலி
திக்குவாயிலிருந்து மீளுதல் - சில யோசனைகள்
கண் சொட்டு மருந்துகளையும், ஆயின்ட்மெண்ட்களையும் பயன்படுத்துவது எப்படி?