குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
ஆசிய பசிபிக் செக்ஸ், சுகாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நல வாழ்வு அமைப்பு சார்பில் உலகில் 13 நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியர்கள் செக்ஸ்-க்கு 7ஆவது இடத்தை அளித்துள்ளனர்.
குடும்ப வாழக்கை மீது அக்கறை செலுத்துவதில்தான் இந்தியர்கள் பிரதான கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட தம்பதிகளிடம் வாழ்க்கைக்கு தேவையான 17 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் இந்தியர்கள் குடும்ப வாழ்க்கை மீது அக்கறை செலுத்துவதில்தான் முதல் கவனம் வைத்துள்ளனர். அடுத்தபடியாக எதிர்காலம் பற்றிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். இந்த வரிசையில் 3-வதாக பணம் சம்பாதிப்பதும், 4-வதாக உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதும் இடம் பெற்றுள்ளது.
இந்திய ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் பாலுறவுப் புணர்ச்சியை 7ஆவது இடத்தில்தான் வைத்துள்ளனர். அதே சமயம் பெண்கள் இதனை 14ஆவது இடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
உலகில் அதிக பட்சமாக இந்தியர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் அதிக திருப்தி அடைவதும் தெரிய வந்துள்ளது. 73 விழுக்காடு இந்திய தம்பதிகள் செக்ஸில் முழு திருப்தி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிலிப்பைன்சில் 52 விழுக்காட்டினரும், தாய்லாந்தில் 30 விழுக்காட்டினரும், சீனாவில் 23 விழுக்காட்டினரும், ஜப்பானில் 10 விழுக்காட்டினருமே செக்ஸ் விஷயத்தில் திருப்தியை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்தியர்கள் 40 வயதுக்கு பிறகு தங்களது ஆண்மையை மெதுவாக இழப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.