முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > பாலியல் > டெல்லி: ஆணுறை எந்திரங்களுக்கு வரவேற்பு குறைவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டெல்லி: ஆணுறை எந்திரங்களுக்கு வரவேற்பு குறைவு
தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பல்வேறு பகுதிகளில் தானியங்கி ஆணுறை எந்திரங்கள் (Condom vending machines - CVMs) வைக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தெரிய வந்துள்ளது.

ஆணுறைகளை வெளிப்படையாகப் பெறுவதில் டெல்லி மக்கள் மிகவும் தயக்கத்தைக் கடைபிடிப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது கழிவறை ஆகிய மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த இயந்திரங்களை நிறுவியது. ரூ. 5-க்கு தரமான ஆணுறைகள் இந்த எந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

டெல்லி மக்களிடம் இந்த எந்திரங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலேயே அவ்வளவாக வரவேற்பு இல்லை என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் துணை இயக்குனர் மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆணுறை எந்திரம் மூலமும் மாதந்தோறும் 20 முதல் 25 பாக்கெட்டுகள் ஆணுறைகளே விற்பனை செய்யப்படுவதாகவும், மாதத்திற்கு 200 முதல் 300 பாக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும்
உடல் நலமும், பாலுறவுப் புணர்ச்சியும்!
பாலுறவில் அவசரம் தேவையா?
ஒலிம்பிக் நிறைவில் `பாலுறவு திருவிழா'
திருமணத்திற்கு முன் பாலுறவால் ஆபத்தா?
மணமகனுக்கு எய்ட்ஸால் திருமணம் நிறுத்தம்
பாலுறவும், திருமண பந்தமும்